பக்கம்:புதிய தமிழகம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 புதிய தமிழகம்

தெருக்களையும், கோவில்களையும், பிறவற்றையும் தன் னகத்தே பெற்றிருந்தது என்பது கூருதே அமையு மன்ருே? அஃது அரசன் வாழ்ந்த இடமாகவும் இலங் கியது என்று சிலப்பதிகாரம் முதலிய கொன்னூல்கள் செப்புவதால், அரண்மனையையும் பெற்றுப் பெரும் பொலிவுடன் விளக்கமுற்றிருந்தது என்று கருதுதல், பொருத்தமே யன்ருே? சுருங்கக் கூறின், அமேரியர் நாகரிகத்தின் உயிர்நாடியாக விளங்கிய பாபிலோன் நகரம்போலப் பாண்டியரது நாகரிக வளத்திற்கு உயிர் நாடியாகக் கொற்கைப் பெருநகரம் விளங்கியது என்று சொல்வது ஏற்புடையது.

கொற்கை தனது பெருந்துறை முத்துக்களாலும் கடல் வாணிகத்தாலும் பாண்டியர்க்குப் பெருஞ் செல் வம் அளித்து வந்த காரணத்தாற்றன், பாண்டியனே "கொற்கைக் கோமான்' என்றும், கொற்கை யாளி' என்றும் புலவர்களும் குடிமக்களும் உளமகிழ்ந்து பெருமிதத்தோடு பாராட்டலாயினர். J

  • இன்றைய கொற்கை

இன்றைய கொற்கை மிகச் சிறிய சிற்றுாராக இருக்கின்றது. இச்சிற்றுருக்கும் அக்க சாலை என் அனும் இடத்திற்கும் இடையே ஏரி போன்ற பரந்த இடம் அமைந்திருக்கிறது. இப்பரந்த இடத்தின் நடுவில் Tான் கொற்கையை 1556 இல் சென்று கண்டேன். இதனைப் பார்க்க எனக்குப் பேருதவி செய்தவர் ரீ வைகுண்டம் கோட்டைப் பிள்ளைமாருள் ஒருவரான திருவாளர் இரா. இலக்கு வன் என்பவர். கொற்கை பற்றிய பல செய்திகளை எனக்குத் தெரிவித்தவர் கொற்கையில் உள்ள திரு. கொ.ச. சிவராமபிள்ளை என்பவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/44&oldid=641916" இலிருந்து மீள்விக்கப்பட்டது