பக்கம்:புதிய தமிழகம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் இராசமாணிக்கனுர் 47

பைக் கருதிப் பல ஊர்கட்கும் சென்றுவிட்டனர் என் ஆறும் ஊரார் உரைக்கின்றனர்.

முன் சொல்லப் பெற்ற கோவில் கல்வெட்டுக் களில் கொற்கை மதுரோதய நல்லூர் என்று குறிக் கப்பட்டுள்ளது. பாண்டிய நாட்டின் தலைநகரமான மதுரையின் சிறப்புக்குச் செல்வம் கொழித்த கொற்கை பெருங் காரணமாக இருந்தமை கருதியே கொற்கைக்கு 'மதுரோதயகல்லூர் எனப்பிற்கால மன்னர்கள் பெய ரிட்டனர் போலும்! -

கொற்கைச் சிற்றுTளிலும் அதன் சுற்றுப் புறங் களிம் ஒன்றேகால் அடிச்சதுரச் செங்கற்கள் கிடைக் கின்றன. கிலத்தை ஐந்தடி ஆழத்தில் தோண்டும் பொழுது களிமண்ணும், பத்தடி ஆழத்தில் சங்குகளும் நிரம்பக் கிடைக்கின்றன; பதினேந்தடி ஆழத்தில் கோண்டும்பொழுது ஒருவகைச் சேறு கிடைக்கின்றது. இங்கு உப்பங்கழி இருந்ததென்பதற்கும் கடல் அருகில் இருந்ததென்பதற்கும் இவை உரிய அறிகுறிகள் என்று ஊர் முதியவர் உரைத்தனர்.

கொற்கையம்பதியில் பல நூற்ருண்டுகளாகப் புகழ் பெற்றது என்று ஊரார் உரைக்கும் வன்னிமரம் ஒன்று இருக்கிறது. அது நேரே நிமிர்ந்து இராமல் தரையை ஒட்டியபடியே பத்தடி சென்று, மேலே நிமிர்ந்துள்ளது, அதன் அடிப்பாகத்தில் பெரிய பொந்து அமைந்திருக் கிறது, அதற்கு எதிரில் சாலேநடுவே சமணதீர்த்தங்கரர் சிலை யொன்று மண்ணுள் பாதியளவு புதையுண்டு இருக்கின்றது. மற்ருெரு தீர்த்தங்கரர் சிலை ஊரை யடுத்த தோட்டம் ஒன்றில் காணப்படுகிறது. இவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/47&oldid=641919" இலிருந்து மீள்விக்கப்பட்டது