பக்கம்:புதிய தமிழகம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் இராசமாணிக்கனூர் 49

தில் கொற்கைப் பெருந்துறையில் கிடைத்துவந்தன என்னும் விவரங்களைத் தெளிவாக அறியலாம்.

.ெ கா ற் ைக யி ல் இன்று வாழும் முதியவர்கள் கொற்கை வளநாடு பற்றிக் கீழ்க்காணப்பெறும் பழம் பாடல் ஒன்றினைப் பாடுகின்றனர்.

'ஆலமரம் அரசமரம் ஆனதிந்த நாடு அதன்பிறகு புன்னைமரம் ஆனதிந்த நாடு 'நாலாம்யுகம் தன்னில் வன்னிமரமான 5ாடு நாற்றிசையும் கீர்த்தி பெற்று நலமிகுந்த நாடு அக்கரையும் மதிபுனையும் சொக்கலிங்க ஈசன் அழகுமுடி கொடைஐயன் அருள்புரியும் வண்மை திக்கனைத்தும் புகழ்கின்ற ஜெகதேவி செழுகி நங்கை சென்னிவெற்றி வேல்தாய் முக்கியமாய் அருள்புரியும் கோட்டைவாழ் ஐயன் முகனையுடன் சிறந்திருக்கும் நாவலடி மெய்யர்...... தக்கார்புகழ் முக்காணி வடக்குவாழ் செல்லி மனமகிழ்ந்து அரசுசெய்யும் பொற்கைவள நாடு சீரான தென்மதுரைக் தேசமது செழிக்கத் திருவளரும் பொற்கையென்று தினம்புகழப் பெற்ருேம் காராளர் வம்சமிது நகரமிது செழிக்கக் கணையோகன் அரசு செய்யும் பொற்கைவள நாடு'

டிகொற்கை ஈசுவரமூர்த்தியா பிள்ளை என்ற முதியவர் எங்கள் முன்னிலையில் இப் பாடலைப் பாடிக்காட்ட, தென்காசி வித்து வான் குற்ருலம் என்பவர் இதனை எமுதினர்.

| சிலப்பதிகாரத்திற் கூறப்பெற்றுள்ள பொற்கைப் பாண்டியன் இங்கு ஆண்டான் என்றும், அதனுல் பொற்கை என்ப்து இவ் ஆரின் பெயராயிற்று என்றும் ஊரார் உரைக்கின்றனர். ஆயின், சங்க நூல்களில் இவ்வூர் "கொற்கை' என்றே பேசப்படுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/49&oldid=641921" இலிருந்து மீள்விக்கப்பட்டது