பக்கம்:புதிய தமிழகம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 புதிய தமிழகம்

தோன்றிய நாளே தொடங்கியுள்ளது. ஆதலால் வாழ் தலே இனியது என்று மகிழ்ச்சி அடையவில்லை. ஒரு வெறுப்பு வந்தபோது இது கொடியது என்று எண் ணவுமில்லை. (4) பேரியாற்று நீரின் வழியே செல்லும் மிதவை போல நமது அரிய 'உயிர் ஊழின் வழிப்படும் என்பது அறிஞர் நூலால் தெளிந்திருக்கிருேம். ஆகவே நாம் நன்மையால் மிக்கவரை மதிப்பதும் இல்லை; அவ் வாறே நன்மையால் சிறியோரைப் பழித்தலும் இல்லை."

விளக்கம்

1. இக்கூற்றின் கருத்து யாது? பண்டைக்காலத் தமிழர் பல நாடுகளுக்கும் சென்று வாணிகம் செய்தவர்; உள்நாட்டு வாணிகத்திலும் வெளிநாட்டு வாணிகத்தி லும் சிறந்த பழக்கம் உடையவர். அவர்கள் வாணிகத் தின் பொருட்டுக் கடல் கடந்து பல நாடுகளுக்கும் சென் றனர். அங்கங்குத் தங்கி அவ்வங்காட்டு மக்களோடு பழகித் தங்கள் வாணிகத்தைப் பெருக்கினர். அயல் நாடு செல்வோர் அங்காட்டு மக்களோடு அகங்கலங்து பழகினற்ருன் வாணிகம் சிறந்த முறையில் நடை பெறும். அந்நாட்டு மொழியையும் ஓரளவு அறிந்து அம்மக்களோடு பேசி அம்மக்கள் உள்ளத்தைத் தம் பால் ஈர்க்க வேண்டும். இத்துறைகளில் எல்லாம் பண் பட்ட தமிழ் வணிகர் தம் நாட்டைப்போலவே, தாம் தங்கி வாணிகம் நடாத்திய பிற நாடுகளையும் மதித்தனர்; அம்மதிப்பு மிகுதியாற்ருன் பல நூற்றண்டுகள் பல நாடுகளோடு வாணிகத் தொடர்பு வலுப்பெற்று வங் தது. தமிழகத்துச் செல்வகிலேக்கு இவ்வயல் நாட்டு வாணிகம் ஒரு சிறந்த காரணமாகும். இந்த உண்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/52&oldid=641924" இலிருந்து மீள்விக்கப்பட்டது