பக்கம்:புதிய தமிழகம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் இராசமாணிக்கனுர் 53

யைத் தமிழ் மக்கள் நன்கு அறிந்திருந்தனர்; அயல் நாட்டு வணிகரைத் தம் நாட்டில் வாழ்வித்தனர்; வசதி கள் அளித்தனர்; நன்கு கலந்து பழகினர். சீனர், அராபியர், யவனர் முதலிய பல நாட்டாரும் சங்ககாலத் தமிழகத்தில் தங்கி வளமுற வாழந்தனர் என்பதைச் சங்க நூல்களால் அறிகின்ருேம். அயல் நாட்டார் குறிப்புக்களும் இவ்வுண்மையை வலியுறுத்தும் சான் ருக நிற்கின்றன. இந்த உண்மையை உளம்கொண்ட கணியன் பூங்குன்றனர் என்ற புலவர், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று சுருங்கக் கூறினர்.

இவ்வுயரிய கருத்து இன்று ஈழம், பர்மா முதலிய நாடுகளுக்கு இல்லாது ஒழிந்தது வருந்தத்தக்கது. தமிழ் வணிகர் அங்நாடுகளில் படும் துன்பம் சொல்லக் கூட வில்லை. ஆனல் வந்தவர்க்கெல்லாம் வாழ்வளித்த தமிழ் நாடு, இந்த விரிந்த மனப்பான்மையால் இன்றும் வட நாட்டவர்க்கும் அயல்நாட்டவர்க்கும் வாழ்வளித்து வரு கின்றது. இது பிறநாட்டார் கடை. இங்கே பொருள் வாங்குதல் கூடாது என்ற எண்ணம் அவனது பண் பட்ட உள்ளத்தில் தோன்றவில்லை. இவ்வுயரிய பண் பாடு தமிழனே வாழ வைப்பதாக இல்லை; அஃதாவது, பண்பாட்டு அளவில் வாழ வைக்கின்றது; பொருளா தார அளவில் வாழ்விக்கவில்லை

2. மனிதன் தன் நற்செயல்களால் த ன் னே உயர்த்திக் கொள்கிருன். தன் தீச் செயல்களால் தன் னேத் தாழ்த்திக் கொள்கிறன்' என்று விவேகானந்த அடி கள் கூறியுள்ளார். மனிதன் ஆவதும் அழிவதும் தன் ேைல தான் ” என்று ஜேம்ஸ் ஆலன் என்னும் மேனுட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/53&oldid=641925" இலிருந்து மீள்விக்கப்பட்டது