பக்கம்:புதிய தமிழகம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 புதிய தமிழகம்

அறிஞன் புகன்றுள்ளான். இப்பேருண்மையையே ஏறத்தாழ 1800 ஆண்டுகளுக்கு முன் கணியன் பூங்குன் றனர் கழறியுள்ளார்.-' தீதும் நன்றும் பி ற ர் தர வாரா' என்று.

மனித வாழ்க்கையைப் பக்குவப்படுத்தும் இவ்வுய ரிய உண்மையை அறிந்தவர் எத்துணேயர்? மனிதன் தன் சொல்லாலும் செயலாலும் பொதுமக்கள் உள்ளங் களேக் கவர்கிருன்; அவ்வாறே தன் தீய சொல்லாலும் செயலாலும் பொதுமக்கள் வெறுப்புக்கு ஆளாகிருன்; கோள் சொல்லுவது, பிறர் வெறுக்கும் செயல்களேச் செய்தல் முதலிய இழிசெயல்களால் பலராலும் வெறுக் கப்படுகிருரன். இங்ஙனம் பலர் வெறுப்புக்கும் காரணம் அவனே தவிரப் பிறர் அல்லர். ' நான் அவ ன ல் கெட்டுவிட்டேன், இவரால் இக்கேடு நேர்ந்தது' என்று தன் கேட்டிற்குப் பிறரைக் குறைகூறும் மக்கள் இந்த உண்மையை உணர்வதில்லை.

இந்த உண்மையை ஒவ்வொரு ம னி த னு ம் உணர்ந்துவிட்டால், அவனது வாழ்வு செம்மைப்படும். கணக்கற்ற அறநூல்களைப் படிப்பதாலோ சமய நூல் களைப் படிப்பதாலோ ஒருவன் பெறும் பயனைவிட இப் பயன் மிகப் பெரியது; உயர்ந்தது. மனிதனது இன்ப வாழ்வுக்கு உயிர்காடியான இப்பேருண்மையை மிகச் சுருக்கமாக உரைத்தருளிய புலவர்பெருமானுக்கு நமது நன்றி உரியதாகுக.

3. உலகில் மலர்ந்த பூ வாடுதல் இயல்பு; தோன் றிய ஒன்று மறைவதும் இயல்பு; அதுபோல் பிறந்தவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/54&oldid=641926" இலிருந்து மீள்விக்கப்பட்டது