பக்கம்:புதிய தமிழகம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள்

குறள் கூறுவது

உலகில் மனிதன் வாழ்வாங்கு வாழ்தல்" வேண் டும். வாழ்வாங்கு வாழ்தல் என்பது யாது? மனிதன் வாழ மனேயும் மனேயாளும் மக்களும் பொருளும் தேவை; மனிதன் வாழ்வது நாடாதலின் அந்நாட்டுக்கொரு மன் னனும் அறந்திறம்பா ஆட்சியும் தேவை; மனிதன் வாழும் மனையில் இன்பம் கிலேக்க, மனேயிலுள்ள அனே வரும் ஒன்றுபட்ட உள்ளத்தினராய் இருத்தல் வேண் டும். அவ்வாறே மன்னன் ஆட்சியி லமைந்த மக்கள் அனைவரும் ஆட்சிக்குக் கட்டுப்பட்டு நடந்தால் நாட்டில் இன்பமே நிலவும். இவ்வாறு மனேயிலும் நாட்டிலும் இன்பம் நிலவ வாழ்தலே வாழ்வாங்கு வாழ்தல்" எனப் படும். N

மனிதன் ஒழுக்கத்தோடு வாழ்தல் வேண்டும்; பணம் ஈட்டுதல் வேண்டும். அதனைப் பாதுகாத்தல் வேண்டும்; உற்ருர் உறவினருக்கு உதவுதல் வேண்டும்; இல்லற இன்பத்தை நன்கு நுகர்தல் வேண்டும்; படிப் படியாக உள்ளத்துறவு கொண்டு அருளாளனுக வாழ் தல் வேண்டும்; உலகத்தைப் படைத்துக் காத்து அழிக் கும் இறைவனைப் பற்றிய உணர்ச்சி உடையவனுக வாழ்தல் வேண்டும்.

குறளின் குறிக்கோள்

கல்வியும் ஒழுக்கமுமே மனித வாழ்க்கைக்கு இன் றியமையாதவை. இவற்றுள் ஒன்று இருந்து, மற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/57&oldid=641929" இலிருந்து மீள்விக்கப்பட்டது