உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய தமிழகம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 புதிய தமிழகம்

முென்று இல்லாவிடினும் மனிதன் தூய வாழ்க்கையை நடத்துதல் இயலாது. மனிதன் இவ்விரண்டாலும் உலகத்தினை ஆராய்ந்து, தன் வாழ்க்கைக்கு ஏற்றவற் றைக் கொண்டு, ஏலாதவற்றை விடுத்து வாழ்க்கை இன்பத்தை நுகர்தல் வேண்டும்.

கடவுட் கொள்கை

திருவள்ளுவர் கடவுளே அறிவுருவ வழிபர்ட்டு முறையில் அறிவிக்கின்றர். கடவுள் முற்றறிவுடைய வர் விருப்பு வெறுப்பு அற்றவர்; இறை, செம்பொருள் என்ற பெயர்களால் வழங்கப் படுபவர்; நினைப்பவர் உள் ளமே அவருக்கு உறையுள்; விருப்பு வெறுப்பு அற்ற கடவுளே விரும்புவோர்க்கு விருப்பும் வெறுப்பும் இல்லை யாகும்; செம்பொருளைக் காண்பதாகிய உண்மை அறிவு தோன்றும். அதுவே வீட்டிற்கு வாயில்.

வள்ளுவர் கருத்துக்கள் உயிர்க் கொலே வேள்வியை வள்ளுவர் விரும்ப வில்லை; விருந்தோம்பலையே வேள்வியென்று விருப்பத் துடன் குறிக்கின்றர். யாகப் பசுவைக் கொன்று தேவர்க்குத் தானம் பண்ணி விருப்பத்தைத் தேடு வதைவிட, ஒர் உயிரையும் கொல்லாது விருந்தோம் பலே உண்மை வேள்வியாகும் என்பது இவரது முடிவு.

மக்கள் அனைவரும் ஓரினம், மறை ஒதுபவன் பார்ப்பான், மண்ணே ஆள்பவன் மன்னன்; உணவை உதவுபவன் உழவன்; பொருள்களே விற்பவன் வணி கன். இவ்வாறு மக்களுள் தொழில் பற்றிய பிரிவுகள் உண்டு; தொழில் மாறினுல் பிரிவும் மாறும். அந்தணர், முனி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/58&oldid=641930" இலிருந்து மீள்விக்கப்பட்டது