பக்கம்:புதிய தமிழகம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் இராசமாணிக்கனுர் 59

வர், நீத்தார், துறந்தார் எனும் பெயர்கள் முற்றத் துறந்த முனிவர்களேயே குறிக்கும் என்னும் முறையில் திருவள்ளுவர் திருக்குறள்கள் விளக்குகின்றன. வேதம் ஒதுபவன் பார்ப்பான். அஃது அவனது பிறப்பு ஒழுக் கம். வேதம் ஓதத் தவறுவானுயின், அவன் பார்ப்பான கான். அவன் வாணிகம் செய்யின் வாணிகன் எனப் படுவான். உழுதொழில் செய்யின் உழவன் எனப்படு வான். பிறவியால் சாதி இல்லை என்பதே வள்ளுவர் கருத்து. வள்ளுவர் கையாளும் வேட்டுவன், வாணிகன், உழவன் முதலிய பெயர்கள் தொழில் பற்றிப் பிறந்தனவாகும். 'பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்" என்பதே அவர் (լիւջ-ւ-.

மக்கள் விருந்தினரைப் பேணுதலும், தென்புலத் தாரைப் பேணுதலும் குறளில் வற்புறுத்தப் பட்டுள் ளன. தென்புலத்தார் என்பவர் ஒவ்வொரு குடியிலும் இறந்த முன்னேர். இத் தென்புலத்தாரை கினைந்து வழிபாடு செய்தல் அவரவர் குடும்பத்தினர் கடனுகும். இறந்தவரை ஒம்புதல் எங்கனம்? இஃது அவரவர் நம் பிக்கைக்கும் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் ஏற்றவாறு வேறுபடும். மனிதன் கிழிந்த ஆடைகளை நீக்கிவிட்டுப் புதிய ஆடைகளை உடுத்துக் கொள்வது போல உயிர் பழுதடைந்த இந்த உடலை விட்டு வேருேர் உடலுள் புகுகின்றது” என்பது பகவத்கீதையில் கண்ணன் வாக்கு. மனிதன் கிழிந்த ஆடையை நீக்கிவிட்டுப் பின் சிறிது நேரம் பொறுத்துப் புதிய ஆடையை உடுத்துக் கொள்வதில்லை; புதிய ஆடையை மேலாகச் சுற்றிக் கொண்டே, தான் உடுத்தியுள்ள கிழிந்த ஆடையை நீக்குதல் வழக்கம். அதுபோலவே பழுதடைந்த உடலே விட்டு உயிர் திடீரென்று நீங்கிவிடுவதில்லை; புதிய உட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/59&oldid=641931" இலிருந்து மீள்விக்கப்பட்டது