பக்கம்:புதிய தமிழகம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் இராசமாணிக்கனுர் , 61

பாதுகாத்தலும், தன் குடும்பத்தைப் பாதுகாத்தலும், என்னும் ஐம்பெருங் கடமைகளும் இல்வாழ்வான் மேற் கொள்ளத் தக்கன என்பதே, --

'தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்ருங் கைம்புலத்தா ருேம்பல் தலை" என்னும் குறளின் திரண்ட கருத்தாகும்.

துன்ப நீக்கம் இங்கிலாந்தில் சிறந்த அயல் நாட்டு வணிகரொரு வர் இருந்தார். ஒரு முறை அவருடைய கப்பல்கள் இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவிற்குப் பொருள்களே ஏற்றிச் சென்றன. அவற்றுள் இாண்டு கப்பல்கள் எக் காரணத்தால்ோ கடலில் மூழ்கிவிட்டன. இச்செய் தியை அறிந்ததும் அவருக்கு நெருக்கமான நண்பரொ ருவர் அவரிடம் சென்ருர், வணிகர் தமது நஷ்டத்தைப் பற்றிப் பேசவேயில்லை. சென்ற நண்பர் காமாகவே அதுபற்றிப் பேசினர். உடனே வணிகர் நகைத்து, 'இந்த நட்டம் சாதாரண விஷயம். இதுபற்றிக் கவலைப் பட்டால் உலகத்தில் வாழமுடியுமா? இலாபமும் நட்ட மும் பகலும் இரவும் போல மாறிமாறி வருவன. ஆத லால், நட்டத்திற்கு அஞ்சுபவன் வாழ முடியாது. இந்த நட்டத்தை விரைவில் ஈடு செய்து விடலாம். நான் இதனை மிகச் சாதாரண விஷயமாகக் கருதுகிறேன்." என்று கூறினர். இந்த நிகழ்ச்சியை நினைவில் வைத்து,

'இடுக்கண் வருங்கால் நகுக; அதனை அடுத்தார்வ கஃதொப்ப தில்," என்னும் குறளின் பொருளை எண்ணிப் பாருங் கள். பொருள் எளிதில் புலப்படும். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/61&oldid=641933" இலிருந்து மீள்விக்கப்பட்டது