பக்கம்:புதிய தமிழகம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 புதிய தமிழகம்

படுவது. ஆயினும், திருக்குறளுக்கு உரை வகுத்த பரி மேலழகர் கெளதமனே 'ஐந்தவித்தான்' என்று கூறி, அகலிகை-இந்திரன் கதையை இக் கு ற ளு க் குத் தொடர்புபடுத்துகிருர் அகலிகையோடு வாழ்ந்த கெளத மன் ஐந்தவித்தானதல் எப்படி?

'கண்டுகேட்டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்டோடி கண்ணே உள,”

என்பது திருக்குறள். இங்கனம் ஐம்புல நாட்ட முடைய இல்லாளோடு கூடிவாழும் கெளதமன், ஐந்த வித்தான் என்று கூறுதல் பொருந்தாது. எனவே, அகலிகை கதையும் இக் குறளுககுப் பொருத்தமாகாது.

முடிவுரை

திருக்குறள் கருத்துக்கள் எல்லா சமயங்கட்கும் பொதுவானவை; எனினும், பெளத்த-சமண சமயக் கருத்துக்களும் இடம் பெற்றுள்ளன என்பதை உரை காண்பவர் மறந்து விடலாகாது. பரிமேலழகர் தம் சம யக் கருத்துக்களையும், வடமொழி நூல்களையும், தம் காலத்து இருந்த சாதிக் கட்டுப்பாடுகளேயும் நினைவிற் கொண்டே, பல இடங்களில் தவறு செய்கின்ருர் என் பதை அறிஞர் அறிவர். அத்தகைய இடங்களை நன்கு ஆராய்ந்து பயன்பெறுதலே திருக்குறள் படிப்பவரது

கடமையாகும.

一密一

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/64&oldid=641936" இலிருந்து மீள்விக்கப்பட்டது