பக்கம்:புதிய தமிழகம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் இராசமாணிக்கனுர் 67

ஆண்டு வந்தவர் கந்தர் என்பவர். மகா பத்ம நந்தன் தன் எட்டுப் பிள்ளைகளோடும் மகத நாட்டை ஆண்டு வங் தான்.அதனுல் இவர்கள்'நவநந்தர்கள்"என அழைக்கப் பட்டனர். இந் நந்தர் செல்வச் சிறப்பு வாய்ந்தவர். இந்த உண்மையை 'கந்தரது செல்வம் பெறுதற்கு வாய்ப்பு இருந்தாலும் என் கலேவர் அதற்காக அங்குத் தங்கா மல் குறித்த காலத்தில் இங்கு வந்து விடுவார்,” என்று ஒரு தமிழ்ப் பெண்மணி தன் தோழியிடம் கூறுகிருள்:

'நந்தன் வெறுக்கைப் பெறினும் தங்கலர் வாழி

தோழி'

கந்தர் செல்வம் பெற்றவர் என்ற செய்தியைத் தமிழ்ப் பெண் அறிந்திருந்தாள் என்பது இதல்ை தெரி கிறதன்ருே? - x

அலெக்சாந்தர் படையெடுப்பு

நந்தர்கள் பாடலியை ஆண்டபொழுது அலெக் சாந்தர் என்ற கிரேக்க மன்னன் இந்தியாவின் மீது படையெடுத்தான், பஞ்சாப் மாகாணத்தில் புருசேரத்த மனுடன் போரிட்டு வென்றன். அவன் கங்கைச் சம வெளியின் மீது படையெடுப்பான் என்ற செய்தியைக் கேட்ட நவநந்தர் அச்சம் கொண்டனன். உடனே பாடலி நகரத்தில் ஒன்று கூடி ஆலோசித்தனர். அலெக்சாங்கர் மகத நாட்டின் மீது படையெடுப்பின், தமது செல்வம் அவனிடம் அகப்படாமல் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர்; அதனை எவ்வாறு மறைத்து வைக்கக் கூடும் என்று ஆலோசித்தனர்; நீண்ட யோசனைக்குப் பின்பு ஒரு முடிவுக்கு வந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/67&oldid=641939" இலிருந்து மீள்விக்கப்பட்டது