பக்கம்:புதிய தமிழகம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் இராசமாணிக்கனும் 7.

தில் மலேயாள காட்டில் சேர்ந்துவிட்டது. மகாண அமைப்புக் குழுவினர் முடிவுப்படி குமரிமுனை தமிழகத் தைச் சேரவேண்டும். அத்துடன் தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றின் கரை இவையும் குழுவினர் வகுத்துள்ள பிற காலுக்காக்களுடன் சேர்ந்து புதிய தமிழகத்தில் இடம்பெறுதல் வேண்டும். இத்தாலுக்காக்களில் தமி ழர்களே திருவாங்கூர் சட்ட அவைக்குத் தேர்ந்தெடுக் கப்பட்டவர்கள் என்னும் உண்மையிலிருந்தே இவற் றில் பெரும்பாலராக உள்ள மக்கள் தமிழ் மக்கள் என் லும் உண்மை ஐயமற விளங்குகின்றது. எனவே, நேர் மையான முறையில் இவ்வுண்மைகளை விளக்கி நமது மாநில அமைச்சர்கள் இவற்றைப் புதிய தமிழகத்தில் சேர்க்க வேண்டும். இத்துறையில் நமது முதலமைச்சர் திரு. காமராசர் மேற்கொண்டுள்ள முயற்சி பெரிதும் போற்றத் தக்கது. இத்துறையில் எல்லாக் கட்சியின ரும் அவரை ஆதரித்து வருதல் பாராட்டத் தக்கது. இந்த எல்லேப்புறப் பகுதிகள் நல்ல முறையில் தமிழகக் தோடு சேர்க்கப்படுதல் வேண்டும் என்பதற்காக, இரவு பகலாக உழைத்துவரும் தமிழரசுக் கட்சித் தலைவர் திரு. ம. பொ. சிவஞானம் அவர்களேத் தமிழர் பாராட் டக் கடமைப்பட்டுள்ளனர். இவர் முயற்சிக்கு உறு துணேயாகப் பிற கட்சியினரும் இருந்துவருதல் பாராட் டற்குரியது.

பல மொழியாளர்

இன்றைய தமிழகத்தில் தமிழர் மட்டும் இடம் பெற் றிருக்கவில்லை. விசயநகர ஆட்சி காலத்தில் தென்னுட் டில் குடியேறிய தெலுங்கர், கன்னடியர், செளராட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/7&oldid=999954" இலிருந்து மீள்விக்கப்பட்டது