பக்கம்:புதிய தமிழகம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 - புதிய தமிழகம்

துவுடைப் போலிந்து மேவரத் துவன்றி மழைபட் டன்ன மணன்மலி பந்தர் இழையணி சிறப்பிற் பெயர்வியர்ப் பாற்றித் தமர்நமகி கீத்த தலைநாளிரவின்...'

இவ்விரு வகைத் திருமணங்களிலும் இக்காலத் திருமணச் சடங்குகள் இடம் பெருமையைக் காண்க. மணமகளை வாழ்வரசியர் வாழ்த்தி மண நீராட்டுதலும் சுற்றத்தார் பெண்ணேக் கணவனேடு சேர்ப்பித்தலுமே, சி ற ங் த சடங்குகளாகக் கருதப்பட்டன என்பது தெளிவு. ‘க ற்பு நெறியினின்றும் வழுவாமல் கண வன் உள்ளங் கவர்ந்த காரிகை ஆகுவார்,” என்று வாழ்வாசியரால் கற்பிக்கப்பட்டதால், மணமகள் கற்புடைய வள் ஆயினுள். அங்ஙனம் கற்பிக்கப் பட்டபடி நடந்த வள் "கற்புடை மனைவி' எனப்பட்டாள்.

திருமணத்திற்கு இன்றியமையாதது, பலரறிய இருதிறத்துப் பெற்ருேரும் மனமக்களே ஒன்று படுத் தலே ஆகும். இன்னவர் மகள் இன்னவர் மகனே மணந்து கொண்டாள் என்பதை அறியச் செய்வதே திருமணத்தின் சிறப்பு நிகழ்ச்சியாகும்.

இவவிாண்டு திருமண முறைகளையும் படித்துத் தெளிந்த வரலாற்றுப் பேராசிரியர் திரு. பி. டி. சீநிவாச அய்யங்கார் அவர்கள், 'இவ்விரு திருமண முறைகளிலும் எரி வளர்த்தல் இல்லை; தீவலம் வருதல் இல்லை. தட்சினப்பெறப் புரோ கிதன் இல்லை. இவை முற்றும் தமிழர்க்கே உரியவை, என்று கூறியிருத்தல் கவனிக்கத்தக்கது.

میL: ی. ن8ه سمL: 3ه

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/72&oldid=641944" இலிருந்து மீள்விக்கப்பட்டது