பக்கம்:புதிய தமிழகம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் பெருந்தகை

சங்க காலப் புலவர்

சங்க காலப் புலவர்கள் சிறந்த கல்விமான்கள்; அதே சமயத்தில் வறுமையால் வாட்டமுற்றவர்கள்; ஆயினும் வணங்கா முடியினர்; தவறு செய்பவன் அரச யிைனும் வலிந்து சென்று கண்டிக்கும் இயல்புடைய வர்; பிறர் துயர் காணுப் பெற்றியினர்; தாமே சென்று அத்துயர் களையும் மனப்பண்பு நிறைந்தவர். அரசரிரு வர் போர் செய்யுங்காலே அவரிடம் சென்று இரு நாடு களுக்கும் ஏற்படும் இன்னல்களே எடுத்துரைத்துப் போர் நிறுத்தம் செய்யும் புகழ்மிக்க மனவலி படைத்த வர் இங்ஙனம்.தமக்கெனவாழாது பிறர்க்கென வாழ்ந்த சங்க காலப் புலவர்களில் தலை சிறந்த பெரியார் கோவூர் கீழார் என்பவர்.

நலங்கிள்ளி-நெடுங்கிள்ளி-போர்

சோழப் பெருவீரனை காரிகால் வளவனுக்குப் பின்பு அரசு கட்டில் ஏறிய நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளி என்னும் அவன் பங்காளிக்கும் சோழ நாட்டில் போர் மூண்டது. இருதிறத்தாரும் தத்தம் படைகளே முடுக்கிப் போரிட்டனர். உறையூரை ஆண்டுவந்த நெடுங்கிள்ளி நலங்கிள்ளிக்குத் தோற்றுக் கோட்டையுள் ஒளிந்து கொண்டான். நலங்கிள்ளி அவனே விடாமற் சென்று உறையூர்க் கோட்டையை முற்றுகை யிட்டான். முற் அறுகை பன்னுள் நீடித்தது. கோட்டையுள் இருந்த மக் கள் வெளியிலிருந்து பொருள்கள் வாராமையால் துன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/73&oldid=641945" இலிருந்து மீள்விக்கப்பட்டது