பக்கம்:புதிய தமிழகம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 புதிய தமிழகம்

புற்றனர்; வழக்கம்போல் கோட்டைக்கு வெளியே வந்துபோகும் வாய்ப்பி ழந்து வருந்தினர். கோட்டைக்கு வெளியிலிருந்த மக்களும் நலங்கிள்ளி படையினரால் துன்புற்றனர்; தம் உரிமையோடு பல இடங்களில் நட மாட இயலாமல் வருந்தினர்.

புலவர் வருகை

இச்செய்தி கோவூர் கிழாருக்கு எட்டியது. அருள் உளம் கொண்ட அப்புலவர் போர்க்களத்தருகில் விரைந்து வந்தார்.-போரினல் இருதிறத்து மக்களும், மாக்களும் படும் துன்பங்களைக் கண்டு அவர் மனம் நெகிழ்ந்தது தமிழ் நாட்டு மூவேந்தர்களும் தம் வேந்த ரென்னும் ஒரு குடியில் பிறந்தவர்களே. அவ்வாறிருந் தும் அம் மூவரும் தம்முள் இருந்த மாறுபாட்டால் பல போர்கள் நிகழ்த்தி நாட்டை அவல நிலைக்குள் ளாக்கிக் கொண்டிருந்த செயல் முன்னரே புலவர் நெஞ்சை வருத்தியது. இங்கு நடை பெறுகின்ற போரோ ஒரே சோழர் குடியில் தோன்றிய இரு மன்னரால் நடை பெறுவதன்ருே? பகைவர் இருவர் போர் செய்வது இயல்பு. ஒரு குடிப்பிறந்தோர் இவ்வாறு போரிட்டு நாட்டையும், நாட்டு மக்களையும் அழிக்கும் செயல் கண்டு ஒருபுறம் வியப்பும் ஒருபுறம் இரக்கமும், ஒருபுறம் இகழ் வும் புலவர் நெஞ்சில் எழுந்தன. -

புலவர் அறிவுரை

புலவர், போரிடும் மன்னரிருவரின் இடையிலும் சென்று நின்றர். சோழ நாட்டுப் பெருவேந்தர்களே! நிறுத்துங்கங் போரின. உங்கள் முன்னேரில் முதலான வர்கள் தமிழ் நாட்டுக்கும் அப்பாலுள்ள பிறநாடுகளே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/74&oldid=641946" இலிருந்து மீள்விக்கப்பட்டது