பக்கம்:புதிய தமிழகம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் இராசமாணிக்கனுர் 77

வாழாமல், ஏங்கிக் கிடக்கும் ஏழை பலர்க்கும் வாரி வழங் கும் வள்ளல் தொழிலில் இறங்கிப் பின்னும் வறுமை யில் இறங்குவர். இங்ஙனம் நாடாறு திங்களும் காடாறு திங்களும் வாழ்ந்த பிற்கால விக்கிரமாதித்தனப் போலவே முற்காலப் புலவர்கள் சில காலம் வள்ளலாக வும் சிலகாலம் வறியராகவும் மாறி மாறி வாழ்ந்து வர லாயினர். இவ்வாறு வாழ்வு நடாத்திய புலவர் பெரு மக்களுள் இளந்தத்தரும் ஒருவராவர்.

நலங்கிள்ளிபால் இளந்தத்தர்

சோழன் நலங்கிள்ளி புவிமன்னனுகவும் கவி மன் னகைவும் விளங்கியவன்; கல்வியும் ஒழுக்கமும் ஒருங்கு வாய்க்கப் பெற்றவன்.

'தீதில் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப்

w பல்லிருங் கூந்தல் மகளிர்

ஒல்லா முயக்கிடைக் குழைகவென்தாரே' என்று அவ்வேங்கன் பாடும் வஞ்சினப் பாட்டு அவன் புறப் பகைவரை வென்றி கொள்ளும் போராண்மை யினையும் காமம் என்னும் அகப்பகைவனை வென்றி கொள்ளும் பிறர் மனைவிழையாய்ப் பேராண்மையினை யும் ஒருங்கு காட்டுமன்ருே? ஒழுக்கமும் கல்வியும் உயி ரும் உடம்புமாகக் கொண்ட இப்பெரு வேந்தன், அத் தகையினராகிய புலவர் பெருமக்களுக்கு வாரி வழங்கும் வள்ளன்மை யுடையனுகவும் விளங்கினன் என்பது கூறவும் வேண்டுமோ இம்மன்னன் புகழைக் கேள்வி யுற்ற புலவர் இளந்தத்தர் அவனைக் கண்டு பாடி பரிசு பெறும் வேட்கை மிகுந்தார், லேங்கிள்ளி அரசு புரியும் புகாரை நோக்கி விரைந்தார்; புகாருள் புகுந்தார்; வள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/77&oldid=641949" இலிருந்து மீள்விக்கப்பட்டது