பக்கம்:புதிய தமிழகம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 புதிய தமிழகம்

வன் கோயிலே வந்தடைந்தார்; நலங்கிள்ளியைக் காணு மல் வருந்தினர்; நெடுங்கிள்ளியின் உறையூரை முற்று கையிட்டு, ஆண்டு அவன்படையுடன் உறைகின்றன் என்பதை அறிந்தார். போர்க்களத்தில் சென்ரு பரிசு கேட்பது எனப் புலவர் மனம் வாடியது; எனினும், புல வர் தம் வறுமை பின்னிருந்து கள்ள, ம ன் ன ரிை ன் பண்பு நலம் முன்னிருந்து இழுக்க, உறையூர்க்கு விரைந்தார் இளங்கத்தர். உறையூர் முற்றிய நலங் கிள்ளியை முற்றுகை யிட்டார் தத்தர்; புகார் வேந்தன் பால் தம் வறுமையைப் புகார் செய்யாமல் அமைதியு டன் இனிது எடுத்தியம்பினன். போரிலேயே ஊக்கம் செலுத்திய நலங் கிள்ளியின் மனம் புலவர் பக்கல் யது. புலவர்தம் ஒட்டிய கன் ன்மும் கட்டிய கங்தையும், நரைத்த தலையும் திரைத்த உடலும் வாடிய மேனியும் பாடிய வாயும் கிள்ளியின் உள்ளத்தை உருக்கின. "புகாரை அமைதியுடன் அரசு புரிந்த அந்த நாள் வங் திலீர்! அருங்கவிப் புலவீர் உறையூர் முற்றிய இந்த நாள் வந்தெனை நொந்து நீர் எய்தினிர். பெரும் பரிசு தரும் பேற்றினையான் பேற்றேனில்லையே! என வருந்தி, இயன்ற பரிசிலே இனிது நல்கிப் புலவரை மகிழ்வித்தான் நலங்கிள்ளி.

நெடுங்கிள்ளி பால் இளந்தத்தர்

கோட்டைக்கு வெளியே ல ங் கி ள் ளி பால் பரிசு பெற்று மகிழ்ந்த புலவர் உள்ளே யிருந்த நெடுங்கிள்ளியை மட்டும் விடுவாரா? அவன்பாலும் சென்ருர் அரண்மனை மாடியில் நெடுங்கிள்ளி பல வகைச் சிந்தனையுடன் உலாவினன். நலங்கிள்ளியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/78&oldid=641950" இலிருந்து மீள்விக்கப்பட்டது