பக்கம்:புதிய தமிழகம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 புதிய தமிழகம்

ார்கள் இங்காட்டில் வாழ்கின்றனர். இவர்கள் வீட்டள வில் தத்தம் தாய் மொழியிற் பேசினும் தமிழ் மக்களுள் தமிழராக இணேந்து வாழ்ந்து வருவது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். தமிழ் மொழி வளர்ச்சியிலும், தமிழ் இலக்கிய வளர்ச்சியிலும், தமிழ்நாட்டு அரசியலிலும், பிற எல்லாத்துறைகளிலும் இவர்கள் தீவிரமாகப் பங்கு கொண்டு வாழ்ந்து வருகின்றனர். எனவே, இவர்களைக் தமிழராகக் கருதியே புதிய தமிழகத்து நிகழ்ச்சிகள் நடைபெறு மென்பதில் ஐயமில்லை. இந் நன்மக்களும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், தமிழகத்து ஆக்க வேலைகளுக்கும் மனமுவந்து பணியாற்றுவர் என்று


புலவர் கல்லூரிகள்

கலைக் கல்லூரிகளையும், பிறத்துறைக் கல்லூரிகளே யும் அரசாங்கம் ஏற்று நடத்தி வருவது போலப் புலவர் கல்லூரிகளையும் அரசாங்கமே ஏற்று நடத்தி வருவது நல்லது. இன்றையப் புலவர் கல்லூரிகள் மடங்களிலும், சாவடிகளிலும், கூரைகளிலும் நடப்பது, தமிழ்வளர்ச்சி எந்த அளவில் இருக்கிறது என்பதற்கு ஏற்ற சான்ரு கும். நாடு உரிமை பெற்று இத்துணே ஆண்டுகளாகியும் நாட்டு மொழிக் கல்லூரிகள் உருப் பெறவில்லை என் லும் உண்மையை அரசாங்கம் உணர்தல் வேண்டும். 'தமிழ், ஆட்சிமொழியாக வரவிருக்கும் இந்த நேரத்தில்* நான் இனித் தமிழில்தான் பேசுவேன் ' எ ன் று கல்வியமைச்சர் கூறிவரும் இந்நாளில் தமிழ்க் கல்லூரி கள் இரங்கத் தக்க நிலையில் இருக்கின்றன என்னும் உண்மையை எடுத்துக் கூறுவது நம்முடைய கடமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/8&oldid=999956" இலிருந்து மீள்விக்கப்பட்டது