பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை "எழுச்சிக்கவிஞர் வ.கோ. சண்முகம் எழுபதுகளின் காலகட்டத்தில் எழுதிய, இந்த புதுக்கவிதைக்கதை நூல் சற்றே வித்தியாசமான - புரட்சிகரமான கதைக்களத்தைக் கொண்டது. சமூகத்தின் கீழ்மட்டத்தில் பலராலும் வெறுக்கப்படும் ஒரு பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்தி இந்த நீண்ட கதைக் கவிதையை வயலூர் சண்முகம் வார்த்திருக்கிறார். இந்த வடிவத்திற்கு அவர் 'கவிதைக்குறுநாவல் என்றும் பெயர் சூட்டியிருக்கிறார். புதிய உவமைகள், புதுப்புது சொல்லாக்கங்கள் என்று புதுக்கவிதையின் புத்துணர்ச்சி மிக்க கூறுகள் இந்தக் கதை முழுவதும் மின்னல் விதைகளைப் போல் தரவப்பட்டுள்ளன. வ.கோ. சண்முகம் சிறந்த மரபுக்கவிஞர். புதுக்கவிதையிலும் அவர் முத்திரை பதித்துள்ளார் என்பதை முரசறையும் வண்ணமாக விளங்குகிறது இந்தக் கவிதைக் கதை நூல். ஆற்றல் மிக்க ஒரு முத்த கவிஞரின் இந்தப் படைப்பை வெளியிடுவதில் அணி பேருவகை கொள்கிறது! அன்புடன் ஆர்.பரிமளா