தமிழ் 9 அதுவளர்ச்சியுற்று இருக்கிறது. தமிழ் வளரவில்லை; இரு க்கிறது. ஆங்கிலத்தைப் போலத் தமிழ், வேர்ச்சொற்கள் பஞ்சமுடையதல்ல. இருந்தும், ஆங்கிலம் வளர்ந்தது; தமிழ்தாழ்ந்தது! இடையில் பல நூற்றாண்டுகளாகத் தடையேற்படாமல் இருந்திருந்தால், புத்தம் புதிய கருத்துக்களைத் தெளிவுபடுத்தத் தமிழ் பயன்பட்டிருக் கும். ஆங்கிலத்தைப் போல் பிறமொழிச் சொற்களைக் கடன்வாங்கவேண்டிய நிலையிலில்லாமல், தமிழில் வேர்ச் சொற்களைக்கொண்டே புத்தம்புதிய சொற்களை உண்டாக் கிக் கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக, 'சைகிள்' என்ற ஆங்கிலப் பெயருடைய பொருள் தமிழ் நிலத்தில் வந்திறங்கும்போது, அதனைச் சுட்டிக் காட்டுவதற்குரிய தமிழ்ச்சொல் இல்லாமலிருப்பது இயற்கையே. அதன் வடிவு, பண்பு, இயக்கம் முதலியன கண்டறிந்து அதற்கேற்பத் தமிழ்ப்பெயர் கொடுக்க இயலுமா என்று பார்க்கவேண்டும். அப்படிப் பார்க்கும்போது. 'ஒற்றைச் சவட்டுவண்டி' அல்லது, 'ஈருருளி வண்டி'என்றகாரணப் பெயரை அகற்குச் சூட்டுவது பொருந்துவதாகும். இந்த முறையில், பெரும்பாலான புதியபொருள்களுக்குப் புதிய சொற்களை உண்டாக்க வேண்டும். இந்தவேலை யைப் புலவர் குழாம் செய்யமுடியும்; செய்யவேண்டும். பொருள்களுக்கும், கருத்துக்களுக்கும் புதியசொற்களைத் தமிழிலேயே கண்டுபிடிக்க இயலாக விடத்துத், தமிழ் ஒலிக்குறிப்புக்கேற்ப அவைகளைத் திருத்திக்கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, Peucilineஎன்ற ஆங்கிலப் பெயரமைந்த புதியமருந்து ஒன்று, இப்பொழுது வந்
பக்கம்:புதிய பாதை 1948.pdf/10
Appearance