உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய பாதை 1948.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 T. புதிய பாதை திருக்கிறது. அதற்கேற்ற தமிழ்ப் பெயரைத் தமிழி லிருந்தே எடுத்தமைத்துக் கொள்வதென்பது எளிமை யுடையதல்ல. இத்தகைய நிலையில் 'பென்சிலின்' என்று தமிழில் கொள்வது தவறாகாது. பெரு வழக்குடைய பிறமொழிச் சொற்களுக்கே, பத் தமிழில் சொற்கள் இருக்குமேயாயின், அவற்றை பெருவழக்குடைய: சொற்களாக ஆக்கும் பெரும்பணியை இலக்கிய அறிஞர்கள், மேற்கொள்ள வேண்டும். எடுத் துக்காட்டாகச் சாதம், ஜலம், சந்தோஷம். க்ஷேமப் போன்ற சொற்களுக்கு மாறாக, சோறு, நீர், மகிழ்ச்சி நலம் போன்ற சொற்களை எடுத்தாளச் சிறிது முயற்சி எடுத்துக் கொள்ளப்படுமேயானால், நாளடைவில் மொ ழி வளர்ச்சியடைய ஏதுவாகும். இயலாத விடத்துத் தமிழ் ஒலிக்குறிப்பிற்கேற்பப் பிறமொழிச் சொற்களைத்திருத் தியாவது தமிழின் சொல் வளத்தைப் பெருக்கும் துறை யில், மற்றவரைக் காட்டிலும் தமிழ்ப் புலவர்கள் இறங்க வேண்டியவர்களாகிறார்கள். புதுக் கருத்துக்களைத் தெளிவாக்கும் சொற்களைத் தமிழிலேயோ,இயலாதவிடத்துத்தமிழோடுசார்ந்தநிலைப் படுத்தியோ தமிழின் சொல்வளத்தைப் பெருக்க, தமிழ்ப் புலவர்கள் முதற்கண் முன்வரவேண்டும். அரசியலார் உதவி, அறிஞர் உதவி, மக்கள் உதவி இந்தத் துறையில் நாளடைவில் பெருகும் வண்ணம்,நிலைமை வந்து கொண் டிருக்கிறது. தமிழறிஞர்கள் ஒன்றுகூடவேண்டும்.ஒன்று கூடிப் போறிஞர்களைக் கொண்ட குழூக்கள் அமைத்து, ஆவன செய்ய முற்படவேண்டும். ஏனைய நாடுகளின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பாதை_1948.pdf/11&oldid=1732755" இலிருந்து மீள்விக்கப்பட்டது