உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய பாதை 1948.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் 11 இலக்கியப் பேரறிஞர்கள் இதனைச் செய்கிறார்கள். ஏன் இங்குச் செய்யலாகாது? பழைமைக்கு வளைந்தும், நெளிந்தும், படிந்தும் வாழ் கிறவர்களைத் தவிர்த்துப், புத்துலகம் அமைக்க உணர்ச்சி பெற்று எழுச்சியுற்று விளங்கும் இளம்புலவர்கள் தமிழ் ஆர்வம் பொங்கி எழும் இளைஞர்கள் - தமிழை வளர்க்க, புத்தம் புதிய கருத்துக்களை வளர்க்க, புதிய பாதையை அமைக்க, ஒன்று கூடித்தீரவேண்டும். கல்வி அமைச்சர் அவனாசிலிங்கனார், பல் பொருள கராதி ஒன்று தமிழில்காண, ஒரு நூறாபிரத்கிற்குமேல் நிதி சேர்த்துள்ளனர். இந்த முயற்சி போற்றத்தக்கது; வரவேற்கத்தக்கது. ஆனால், தமிழறிஞர் என்றுசொல்லிக் கொண்டு தமிழுக்குப் பகைவராய் விளங்குவோரைக் கொண்டு, அந்த அகராதியைச் செப்பனிட அமைச்சர் முயல மாட்டார் என்பது எமது துணிபு. ஆகவே, இந்த வேலையைச் செவ்வனே செய்து முடிக்கும் முயற்சியை எடுத்துக்கொள்ளத், தமிழ்ப்பேரறிஞர்கள் முந்துறவேண் டும். 'எல்லார்க்கும் எல்லாம்' என்றிருப்பதான புத்துல கம் நோக்கித் தமிழகத்தை இழுத்துச் செல்ல, எனை யோரைக் காட்டிலும் புலவர்கள் பாடுபடவேண்டும். பழைமைக் கருத்தை மாற்றித்,தேவையான புதுமைக் கருத்துக்களைச் செந்தமிழ்த் தேனில் குழைத்து, இலக் கிய வட்டிலின்மூலமாக மக்களுக்கு ஊட்டவேண்டும். பாரதியாரும், அவரைவிடச் சிறப்புடைய முறையில் பாரதிதாசனும் வழிகாட்டிகளாக அமைந்துள்ளனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பாதை_1948.pdf/12&oldid=1732756" இலிருந்து மீள்விக்கப்பட்டது