உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய பாதை 1948.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 புதிய பாதை இலக்கியத்தின் போக்கை மாற்ற,இலக்கியத்தை வளர்க்க இலக்கியத்தைப் புதுப்பிக்க இளம்புலவர்களே, முன்வா ருங்கள்! நாடு உங்களை எதிர்பார்த்து நிற்கிறது! இனைஞர் களால்தான் செயலாற்று வழியை மாற்றவோ, வளர்க்க வோ முடியும். அவர்கள் மாற்றியிருக்கிறார்கள். எனவே, இளம்புலவர்களும் அவர்களுக்குரிய கடமையைச்செய் தால், தமிழகம் புதிய பாதையில் விரைந்து செல்லும் என்பது திண்ணம்! வங்கம், தன் தாய்மொழியான வங்காளிமொழியை அரசியல் மொழியாக ஏற்றுக்கொண்டுவிட்டது. அசாமும் ஐக்கிய மாகாணமும், தங்கள்மொழிகளையே அரசியல் மொழிகளாக ஆக்கிக்கொண்டுவிட்டன. எனவே தமிழக மும், தன் தாய்மொழியாம் தமிழை அரசியல் மொழியா கக்கொள்ளவேண்டும். அந்தமுயற்சி, அண்மைபில்வெற்றி பெறும்; வெற்றிபெற்றே தீரும். தமிழகப் பாராளும் மன்றத்திலிருந்து சிற்றூர் மன்றம்வரையிலும், தமிழே சொல்லாடலாக அமையும். நீதிமன்றங்கள், அலுவலகங் கள், பணிமனைகள், வாணிகக் களங்கள், பல்கலைக்கழகங் கள், அங்காடிகள் ஆகிய எங்கணும், தமிழே முதன் மொழியாக ஒலிக்கப்பெறும். அவற்றிற்கெல்லாம் உரிய வாறு, தமிழைத் திறனுடையதாகச் செய்யவேண்டிய பொறுப்புப், புலவர்களைச் சார்ந்ததாகும். ஆகவே,கடமை யைச்செய்ய இளம்புலவர்கள் புறப்படுவார்களாக!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பாதை_1948.pdf/13&oldid=1732758" இலிருந்து மீள்விக்கப்பட்டது