14 புதிய பாதை பத்திற்கும் உருவிலே ஒருமைப்பாடு இருக்கிறது என் பது பொருள்.அந்த ஒருமைப்பாட்டின் திறமைக்கேற்ப, அது அருங்கலைச் சிற்பம் என்று போற்றப்படுகின்றது. அதுபோல, மக்களுடைய மனநிலையைப் படம் பிடித்து, எழுத்தோவியத்தில் தீட்டிக்காட்ட விரும்புகிறான் இயற் புலவன். ஓவியக்காரனும் சிற்பியும், தம் அறிவின் திறத் தால் தத்தம் கலைகளை அழகு படுத்திக் காண்பிக்குமாறு போல, இயற் புலவனும், மக்கள் மனதில் எழும் ஒவ் வொன்றையும் அழகுபடுத்திக் காண்பிக்கவிரும்புகிறான். ஆகவேதான், இலக்கியம் அல்லது இயற்கலை, அருங்கலை களுள் ஒன்றாகச் சொல்லப்படுகின்றது. மற்றக் கலைகளெல்லாம் வியப்பின்பம் ஒன்றையே நல்க, இலக்கியம் பெறற்கரிய இன்பத்தைப் பயப் பதோடு செயற்கரிய பல செயல்களையும் செய்யவல்லதா கிறது. எண்ணங்களை ஊறி எழச்செய்யும் உள்ளத்தை உருவாக்கி வருவது, இலக்கியந்தான்!மற்றக் கலைகளெல் லாம் வளரச் செய்வதற்குக் காரணமாசு இருக்கும் அறி வையே அழகுபடுத்திக் காட்டும் ஆற்றல் படைத்தது, இலக்கியம்! இலக்கியம் எந்த வழியில் மக்களின் மன நிலையை மாண்பு படுத்துகிறதோ, அந்த வழியில் மக்கள் செல்லுகிறார்கள். இதைத்தன்,நாகரிகம் படைத்த நாடு களில் காண்கிறோம். படியாத பாமா. மக்கள் படித்தவர் களைப் பொறுத்தும், படித்தவர்கள் தாம் கற்ற கல்வியறி வைப் பொறுத்தும், கல்வியறிவு அது புகட்டப்படுகின்ற இலக்கியத்தைப் பொறுத்தும், இலக்கியம் அது எழு வதற்குக் காரணமாக இருக்கும் மொழியைப் பொறுத் தும் இலங்க வேண்டியிருக்கிறது என்பது புலப்படுகின்
பக்கம்:புதிய பாதை 1948.pdf/15
Appearance