இலக்கியம் 15 றது. மக்களின் மனநிலையை மாற்றுவதன்மூலம் உலகத் தின் போக்கையேமாற்றும் இலக்கியங்களைத் தம் எழுது கோலின் முனையிலே எழுப்பிய வீரர்களைப் போற்றிப் புகழும் அளவுக்கு, உலகம் வேறு யாரையும் போற்றிப் புகழந்தது கிடையாது.மற்றக்கலைகள், இன்பம் ஒன்றைத் தான் பயக்கும்; அதுவும் அக்கலைகளோடு தொடர்பு கொண்டிருக்கும் அளவுக்குத்தான்.ஆனால்இலக்கியக்கலை, கற்குந்தோறும் இன்பம் பயக்கும்! மக்களின் மனநிலை யை மாற்றும்!வீரர்களை உண்டாக்கும்!மாற்றாரை மண்டி யிடச் செய்யும்! ஒடிந்து கிடக்கும் உள்ளங்களைத் தட்டி எழுப்பும்! எஃகு உள்ளமாக ஆக்கும்! மமதையாளரின் மௌ டீகக் கோட்டையைத் தகர்க்கும்! அரியணைகளை ஆட்டி வைக்கு! பெரியவர்களைச் சிறியவர்களாக்கும். சிறியவரைப் பெரியவராக்கும்! அதே சமயத்தில், மக் களுக்கு மடமையும் ஆக்கும்! உலுத்தர்களுக்கு உயர்வு கொடுக்கவும் செய்யும்! மக்களைக் கோழைகளாகவும் ஆக் கும்! குனிந்து நடக்கவும் செய்யும்! நல்லதும் பயக்கும், தீயதும் பயக்கும். ஆகவே இலக்கிலம், நெருப்பைப் போல நன்மைக்கும் பயன்படும்,தீமைக்கும் பயன்படும். பயன், அதனைக் கையாளுகின்றவரைப் பொறுத்திருக் கிறது. உலக ஏடுகளைப் புரட்டிப் பார்க்கும்போது, பகுத் தறிவென்னும் உலைக்கூடத்தில் வார்க்கப்பட்டஇலக்கியங் கள் தான், ஈடும் எடுப்புமற்று எதுவரினும் அஞ்சாது, இறுமாந்து செம்மாந்து நிற்கக் காண்கிறோம். முழு வதும் பகுத்தறிவு உலைக்கூடத்தில் வார்க்கப்படாத அந்த இலக்கியங்களில்கூட, எவ்வெப் பகுதி அந்த உலைக்
பக்கம்:புதிய பாதை 1948.pdf/16
Appearance