உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய பாதை 1948.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியம் 17 க தோன்றி வளர்ந்த வீரர்களின் வெற்றிகள் விளம்பப் படும் இலக்கியங்களைத் தம் மக்களிடத்தே தந்தார்கள். அவற்றைக் காணும் அவர்கள் உள்ளம், உணர்ச்சியால் ஓரளவுக்கு முறுக்கேறிற்று, முறுக்கேறுகின்றது. இந்த நாட்டில்,வெங்களம் நின்று தகடூரெறிந்த பெருஞ்சேரலி ரும்பொறையைப் பற்றிய பாடல்களை, ஆரியப்படை கடந்த வேந்தர்களைப் பற்றிய வெற்றிமாலைகளை, மக்களி டத்தில் தருவதில்லை. ஆனால், குடியேறிய வன்கணாளர்க ளின் கொற்றத்தைப்பற்றிப் பரணிபாடுகிறார்கள் பண்டி தர்கள். நாடோடிகளாக வந்தவர்களைக் கடவுளாக்கினார்கள்! காதைகளும் பாடினார்கள்! எப்படி இந்த நாட்டில் வீரம் இருக்கமுடியும்? கயமைப் புராணங்களை எண்ணுகின்ற உள்ளம்,எங்ஙனம் தன் கடமையைப்பற்றி நினைக்கும்? நினைப்பதற்கு நேரம் ஏது? அல்லும் பகலும் அநவரத மும், "ஆதலாலிப் பிறவி வேண்டேன் அரங்கமா நகரு ளானே" என்று கூறத்தானே, கலாரசிகர்கள் கொடுக்கும் இலக்கியங்கள் மக்களுக்குக் கற்றுக்கொடுத்தன. புறநானூற்றைக் கண்டோம், அதைப்பெரிய புரா ணத்தால் பண்டிதர்கள் மறைத்திருப்பதையும் கண் டோம். கரிகால் வளவனையும், அவன் அரசிருக்கையாகிய பூம்புகாரையும் புகழ்ந்து கூறும் பட்டினப் பாலையைக் கண்டோம்; அது கம்பராமாயணத்தால் மறக்கப்பட்டு மறைக்கப்பட்டிருப்பதையும் கண்டோம். அகநானூறு, ஐங்குறு நூற்றைக் கண் டோம்; அவை இருந்த இடத் தில், அழகரந்தாதிகள் இருக்கக் கண்டோம். போற்றப் படவேண்டிய இலக்கியங்கள் போற்றப்படவில்லை. இழிவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பாதை_1948.pdf/18&oldid=1732774" இலிருந்து மீள்விக்கப்பட்டது