18 புதிய பாதை படுத்தும் நூல்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கின்றன. அழகும் எழிலும், அறிவும் திறனும், வளமும் வாணிக மும், ஆட்சியும் மாட்சியும், இன்பமும் துன்பமுமாகக் கொடுக்கப்பட வேண்டிய இலக்கியக் கருத்துக்கள் மாறி, கடவுளும் சமயமுமாகக் காட்டப்படுகின்றன. இதனைக் கண்ட புரட்சிக் கவிஞர் பாரதிதாசனவர்கள் வெகுண்டு, மாடுகளும் வழக்கத்தால் செக்கைச் சுற்றும் மடையர்களும் இயற்றிடுவார் கடவுட் பாடல்! என்று கூறியுள்ளார். நாட்டின் நிலையை நல்ல முறையில் உணர்ந்ததால் உள்ளம் குமுற,குமுறிய உள்ளத்துடனே கொதித்தெழுந்த சுயமரியாதைக்காரன், தீப்பந்தமும் கூர். வாளும் வந்திய கைகளுடன் தமிழ்ப் பூங்காவில் உலவத் தொடங்கியுள்ளான். கள்ளியையும், கற்றாழையையும் முட்புதரையும், நச்சுச்செடிகளையும் வெட்டி வீழ்த்தி, வீழ்த்தப்பட்டவைகளிலே தீவைக்கக் கிளம்பியுள்ளான், இலக்கியத்தை, நறுமணம் கமழுகின்ற பூஞ்சோலையாக ஆக்க நினைக்கும் சுயமரியாதைக்காரன், முதலில் அழிவு வேலை செய்ய வாளும், பந்தமுமாக வலம்வருகின்றான். இலக்கியப் பூஞ்சோலையின் காவற்காரர்கள் என்று சொல் லிய பண்டிதர்களிடம், பன்முறை சொல்லிப்பார்த்தான் கள்ளியையும் கற்றாழையையும் அகற்று என்று. கேட்க வில்லை. சுயமரியாதைக்காரன் இன்று தன் கடமையைச் செய்ய முனைந்துள்ளான்.இப்பொழுது இடைமறிக்க அவர் கள் கைகள் வருமாயின், வீசும்வாள் அவற்றின் மீது வீழ்ந்தேதீரும். துண்டாக்கப்பட்டவைகளை மீண்டும் ஒட் டிக்கொள்ளவும் முடியாது. காரணம், கள்ளிகளோடு சேர்ந்து கைகளும் வெந்துபோகும். கலாரசிகர்களைக்
பக்கம்:புதிய பாதை 1948.pdf/19
Appearance