இலக்கியம் 19 குற்றம் சொல்லவேண்டுமென்பது நமது கொள்கை அல்ல. காரணமில்லாமல் குற்றம் கூறவில்லை. பகுத்தறி வுப் பாதையிலே சென்றுகொண்டிருக்கும்போது சுயமரி கூடவர இயலவில்லை யாதைக்காரனோடு என்றால், குறுக்கே நில்லாமல் ஒதுங்கி நின்றுகொள்ளட்டும். ஒதுங்கிநில்லுங்கள் என்று கேட்டுக்கொள்வதற்குக் கார ணம், அச்சமல்ல; அவர்களும் நம்இனம் என்ற உணர்வு. "வெட்டாத கத்தியினை வீசாக் கையர்ல் வெடுக்கென்று தூக்கிகமை வீழ்த்தப் பார்க்கும் முட்டாள்கள்..... என்று சற்றுக் கடுமையாகப் புரட்சிக் கவிஞரால் கூறப் படுகிற அவர்கள், சிறிது சிந்தித்துத் தெளிவு பெறட்டும். நாம் ஏன் தமிழிலக்கியங்களில் ஒரு பகுதியை வெறுக்கிறோம்? கலையையுணரும் செவியுணர்வும், நுண் மாண் நுழைபுலமும், எஃகுச்செவியும் அவர்களுக்கிருப் பது போல நமக்கில்லையா? இல்லை என்றுசொல்ல அக் கலைவாணர்களே அஞ்சுவார்களே. சொற்செறிவும், பொரு ளாழமும், உவமை நயமும், அணி அழகும் அவர்களுக்குப் புலப்படுவது போல, நமக்குப் புலப்பட வழியில்லையா? அதுவும் கூறமுடியாதே. நம்மிற்பல புலவர் கள் இருக்கிறார்கள் என்பதை அவர்களே உணர்கிறார். களே! நமக்குக் கவிபாடத் தெரியாத? அதோ, பாரதிதாச னின ஏறு நடை கண்டு பதுங்குகின்றவர்களைக் காண்கி றோமே! சொல்லாற்றல் இருக்க வழி இல்லையா? தோழர் தளபதி அண்ணாதுரையோடு போட்டியிட முடியாமல், சேதுப்பிள்ளையும் பாதியாரும் ஓடினதை அன்று கண்
பக்கம்:புதிய பாதை 1948.pdf/20
Appearance