20 புதிய பாதை டோமே! வீரஉரை பகர முடியாதா? அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமியின் சொற்பொழிவு என்றவுடனே,கைகளும் தோள்களும் துடிக்கின்றனவே! சிந்தனைச் சிற்பி கிடை யாதா? சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் முன்னால்,குருட் டு நம்பிக்கைகளும். மூடப்பழக்க வழக்கங்களும் பொடி யாவதைக்கண்டோமே! கட்டுரை எழுதும் வன்மை காணப் படவில்லைபா? கைவல்யத்தின் கட்டுரைக்குக் கல்யாண சுந்தரங்கள் அன்று கலங்கிய கலக்கத்தினால், இன்றும் விடை கூற வாய் திறந்த பாடில்லையே!புத்தம் புதியகருத் துக்களை அள்ளி அள்ளிவீசி, மணிக்கணக்கிலே மழையாகப் பொழியும் அறிவுக் களஞ்சியம் இல்லையா? அதோ, தாடி யோடு மாற்றார் நடுங்கச் சிங்கமென நிற்கிறாரே பெரியார்! எனவே, நமக்கு அழகைப் பார்க்கும் ஆர்வமும், இன்பம் பெறும் நோக்கமும், கவிதைபிடம் காதலும் இல்லை என்று கூறமுடியாது. இருந்தும், ஏன் கம்பராமாயணத் தைக் கொளுத்த வேண்டுமென்கிறோம்? இயற்கையின் எழிலை, நாட்டின் சிறப்பை, வீரத்தின் மேம்பாட்டை, வள்ளற்றன்மையின் பெருமையை, மக்களின் பண்பை நீதியின் நேர்மையை இழிவு பயக்கும் கட்டத்திலில்லா மல் இனவுணர்ச்சியோடு அமைக்கப்பெற்ற பாடல்களாக இருக்குமாயின் அவற்றை என்றும்நாம் வரவேற்கிறோம். தோழர் தளபதி அண்ணாத்துரை கூறுவதுபோல, நல்ல பகுதிகளை எடுத்துக்கொண்டு, ஆபாச-இழிந்த-மாற்றானை உயர்வு படுத்தியுள்ள பகுதிகளை, எங்களிடம் வீசி எறியுங்கள்; எற்றிய தீப்பந்தத்தை அதில் வைக்கிறோம் என்றுதான் நாம் கூறுகிறோம். மக்களை ஆரிய அடி வருடி களாக ஆக்கியவை, கம்பராமாயண பஜனைக் கூடங்கள்
பக்கம்:புதிய பாதை 1948.pdf/21
Appearance