உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய பாதை 1948.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியம் 23 நாம் சொல்லுகிறோம். கலைவாணர்கள் நம்மீது பாய்வதில் பயனில்லை. இனியேனும் கருத்தை யுணர்ந்து, கடமை யைச் செய்ய முந்தட்டும். இலக்கியப் பூஞ்சோலையில், புத்தம் புதிய பூச்செடி களை நடுவதிலும் நாம் பின்னடையவில்லை! நமது பெரு மைக்குரிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் நட்ட பூஞ்செடி களின் மணம், திராவிடநாடு முழுவதும் பரவிநிற்கின்றது. காலத்திற்கேற்ற கருத்தைக் கவிதைகளிலே காட்டுகின்ற கவிஞனையே, இன்று உலகம் தேடுகின்றது. சிற்பமும், ஓவியமும், இசையும் என்றைக்கும் வளர்க்கப்படக்கூடும். அவற்றிற்குரிய இயற்கை என்றும் இருக்கிறது. ஆனால் கவிஞனே அப்போதைக் கப்போது தேவைப்படுபவன். கடமையைச் செய்யக் கவிஞன்மறந்தால், மக்களின் முன் னேற்றம் தடைப்படும். தடைப்படுவது மட்டுமல்ல, தன் நிலையிலிருந்து இழியவேண்டிவரும். இதைநன்கு உணர்ந்து வாளும் தீப்பந்தமுங்கொண்டு தமிழிலக்கியப் பூஞ்சோலை யில் நுழையும் சுயமரியாதைக்காரனைக்கண்டு, முட்புதர் களிலே ஒளிந்து கிடக்கும் ஆரிய நரிகள் ஊளையிடுகின்ற ன! அவற்றிற்குக் காப்பளிப்பதாகவாக்களித்துக் கல்யாண சுந்தரங்களும் கதிரேசர்களும், அவற்றைத்தட்டிக்கொடுக் கின்றார்கள். இனியும் தட்டிக்கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறோம். ஏனென்றால், தட்டிக்கொடுக்கும் கைகள் எாளுக்கு இரையாகிவிடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பாதை_1948.pdf/24&oldid=1732780" இலிருந்து மீள்விக்கப்பட்டது