உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய பாதை 1948.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 அறிவியல் வளர்ச்சி அறிவியல் (Science), அணுவின் ஆற்றலைக் கண்டு பிடிக்கும் அளவிற்கு வளர்ந்தோங்கி வந்திருக்கிறது. மனித அறிவுக்குப் புலப்படாமலிருந்த இயற்கையின் உண்மைத் தோற்றத்தைப், படிப்படியாக அறிமுகப்படுத் திவருவது அறிவியலாகும். அறிவியலின் துணையால் தான், காட்டு மிராண்டி வாழ்கை நாகரிகநிலைக்கு நகர்ந்தி ருக்கிறது. அறிவியல் அறிமுகப்படுத்திவைத்த உண்மை கள் சில; அறிமுகப்படுத்தவேண்டிய உண்மைகள் பல இருக்கின்றன. அறிவியலின்பயணம், தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கும். இத்தகைய அறிவியலின் துணையின்றி, நாகரிக உலகம் முன்னேற்றப் பாதை யிலே சுழன்று வந்திருக்கமுடியாது. அறிவு வளர்ச்சியின்விளைவு அறிவியல்! அதுசிந்திக்கும் மனிதரின் முயற்சியால் உருப்பெறுவது! அந்த அறி வியலைப் பழித்துக் கூறுவதன் மூலம் தம் அறிவு மேம்பாட்டை விளக்கிக் காட்டிக்கொள்வதாகக் கருது வோர்சிலர், இந்தநாளிலும் வாழக்காண்கிறோம். அறிவிய லைவெறுப்பதன் காரணமாகப், பழமையைக் காப்பாற்றி விட்டதாக அவர்கள் எண்ணிக்கொள்கிறார்கள். இத்த கைய பழைமை விரும்பிகள், அறிவியலின் பயனை நுகரா மல் இருக்கிறார்களா, என்றால், இல்லை! அவர்களுக்குப் பழைமையின் மீது ஒருவித மோகம்! பழைமையைக் காப்பாற்ற வேண்டுமென்றால், புதுமையைத் தோன்றாமல் செய்யவேண்டிய பொறுப்புப் பழமை விரும்பிகளைச் சார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பாதை_1948.pdf/25&oldid=1732781" இலிருந்து மீள்விக்கப்பட்டது