அறிவியல் வளர்ச்சி 25 கிறது. அறிவியல், அறியாமையைப் போக்கிப் புது மையை லிளக்கி வருவதால், அது ஒழி க்கப்படவேண்டும் என்று அவர்கள் கருதுகின்றார்கள். இத்தகையோர், எனைய நாடுகளைக் காட்டிலும் இந்தியா வில்-குறிப்பாக நம் நாட்டில் -அதிகமாக இருப்பதனால் தான், மக்களின் வாழ்க்கைத்தரம் உயராமல் இன்னும் இழிந்த நிலையிலேயே இருந்து வருகிறது. அண்மையில், கோவைநகரில் நடைபெற்ற மாகாண மருத்துவச் சங்க மாநாட்டைத் திறந்துவைத்துச் சொற் பொழிவாற்றிய பேரறிஞரான சர். சி. வி. இராமன், அறிவியல் அறிஞர்கள் தற்காலத்திய ஆராய்சிகளை எடுத்துக்கொண்டு மேன்மேலும் பெருக்க வேண்டுமே யல்லாமல், நமது பழம் பெருமைகளை நினைத்துக்கொண் டிருத்தல் கூடாது என்றும், மனித சமுதாயம் முன் னேற்றமடைந்து வருகிறதென்றும்,அறிவியல் ஆராய்ச்சி உலக நன்மையை முன்னிட்டுக் கண்டு பிடிக்கப் படுகிறது என்றும், நாம் முன்னேற வேண்டுமானால் நாம் நமது மனப்பான்மையை மாற்றிக் கொள்ளவேண்டும் என்றும், நாம் பழமையிலேயே எல்லா அறிவும் பொதிந்து கிடக் கிறது என்று எண்ணுவது தவறு என்றும், நாம் நன்கு உழைக்கவேண்டும் என்றும் மிகவே விளக்கியுள்ளார். சர். சி. வி. இராமன், நோபல்பரிசு பெற்ற சிறந்த அறிவி யல் அறிஞர். அவர்வருந்திக் கூறுகிறார்,நமக்குப்புதுமை வழியே செல்ல எண்ணம் ஏற்படாவிட்டால், மனி தசமு தாய முன்னேற்றப் பாதையிலே சிறிதளவு கூடச்செல் ல முடியாது என்பதை. அந்தச் சொற்பொழிவில்
பக்கம்:புதிய பாதை 1948.pdf/26
Appearance