உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய பாதை 1948.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியல் வளர்ச்சி 27 எடுத்துக்காட்டிமனிதனின் உடற்கூறுபாடுகளைப் (Physio logy) பிரித்துப் பிரித்து உணர்த்தி,மற்ற உயிர்வகைக ளின் தன்மைகளை (Biology) யெல்லாம் அறிவுறுத்தி,மா வகைகளின் பண்புகளை (Botany) யெல்லாம் தெளிவு படுத்தி, மனிதன் தன் வாழ்க்கையை ஏற்ற வண்ணம் அமைத்துக்கொள்ள அறிவியல் அரும்பாடுபட்டு வருகிறது. மனிதவாழ்வின் குறிக்கோளாகிய இன்பத்தைஎளிதில் பெற வேண்டிய வசதிகளை யெல்லாம், அறிவியல் செய்து தரு கிறது. மனிதன் காணும் கனவுகளை யெல்லாம், நனவாக் கிக்காட்டுகிறது. போர்க்காலங்களில், அறிவியல் தீமைபயக் கும் பயங்கரப் படைகளை உண்டாக்கித்தருகிறது என்று குற்றஞ்சாட்டி, அதனை வெறுக்கத் தலைப்படுகிறார்கள் சிலர். தீமைக்குப் பயன்படும் ஆயுதங்களைச் செய்யும்வழி யை அறிவியல் சொல்லிக்கொடுக்குமேயொழிய, ஆயுதங்க ளைச்செய்யச் சொல்லாது. நன்மைக்கும் தீமைக்கும்பயன் படுத்துவது, மனிதனுடைய மனப்போக்கைச்சேர்ந்தது. குற்றம் மனிதனுடையது; அறிவியலுடையது அல்ல. மருத்துவத் துறையில் அறிவியல் சாதித்திருக்கும் வெற்றிகளைச், சர். சி. வி. இராமன் குறிப்பிடும் போது, 'மக்களைக் கொல்லும் கொடியபகைவர்கள் மக்கள் அல்ல; உண்மையில் சிறு, சிறு கிருமிகளே மக்களுக்குத் தீராப் பகையாக விளங்குகின்றன. பார்முழுதும் கட்டி ஆளும் மன்னர்களே அச்சிறு கிருமிகளாவர். அவர்கள் தயவில்தான் மனிதர்கள் வாழ்கிறார்கள்' என்று நகைச் சுவை படக் கூறியுள்ளார். 'இறந்தவரை மீண்டும் உயிர் பெற்று வாழும்படிசெய்ய முடியும் என்ற உறுதியோடு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பாதை_1948.pdf/28&oldid=1732785" இலிருந்து மீள்விக்கப்பட்டது