உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய பாதை 1948.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 புதிய பாதை ரஷ்ய நாட்டு அறிவியல் அறிஞர்கள் விடாமுயற்சியுடன் பாடுபட்டு, ஓரளவுக்கு வெற்றியும் பெற்று வருகிறார்கள். உயிருக்கு முடிவு ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சிச் செய்து கொண்ட ரணசிகிச்சைகளெல்லாம், இன்று மிகமிக எளி தாகச்செய்யப்படுகின்றன. அறிவியலின் பயனாக நாடோ றும் வளரும் மருத்துவத்தை, நன்கு பயன்படுத்தக் கற் றுக்கொண்ட நாடுகளில்,மக்கள் நல்வாழ்வு வாழ்கிறார்கள். சராசரி ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ்கிறார்கள். அங்கெல்லாம் குழந்தைச்சாவு மிகமிகக் குறைவு. இளம் வயதில் இறப்போரின் தொகை:யும் மிகக் குறைவு. இவற்றிற்கெல்லாம் காரணம், அவர்கள் வாழக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். வாழவழியமைத்துக்கொடுக் கும் அறிவியல், அங்குப் போற்றப்படுகின்றது! புதுமை வளர்க்கப்படுகின்றது! இங்குள்ளோர், வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்என்ற முயற்சியில்லாத வகை யில், வளர்க்கப்படுகிறார்கள். நாட்டை நடத்திச் செல்லும் துறைகளின் முன்னணியில் எப்படியோ இடந்தேடிக் கொண்டுநிற்பவர்கள், மக்கள் வாழ்வைப்பக்குவப்படுத்தித் தரும் அறிவியலைப் போற்றி வளர்க்க மறுக்கிறார்கள். எனவே, இங்கு வாழ்வு பூக்கப் புதுமையொளி வீசப் படாதவாறு, தடைப்படுத்தப்பட்ட நிலை இருக்கிறது. காலந்தாழும் என்றகுறை ஏற்படுமே யொழியப், புதுமை யொளிவீசாமல் நின்றுவிடும் என்று அஞ்சத்தேவையில்லை. பழமை விரும்பிகள், புராணக்காரர்கள், மதத்தலைவர்கள், குருமார்கள், புதுமையை வெறுப்பதே อ விவேகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பாதை_1948.pdf/29&oldid=1732786" இலிருந்து மீள்விக்கப்பட்டது