உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய பாதை 1948.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 புதிய பாதை வும் தென்னாட்டில் ஒன்றும் இல்லையென்றே கூறிவிடலாம். பங்களூரில் மட்டும் ஒன்று இருக்கின்றது. அதை மைசூர் தனி ஆட்சி கண்காணித்து வருகிறது. தென்னாட் டைப்பொறுத்த வரையில், மக்கள்,மூளை வலிவு உடைய வர்கள் என்று பலரும் கூறக்கேட்கிறோம். அப்படிஇருந் தும்,வளப்பமுள்ள அறிவைப் பயன்படுத்துவதற்கேற்ற அறிவியல் ஆராய்ச்சிக் கூடங்கள் இல்லாமலிருப்பது, தென்னாட்டவரின் ஏமாந்த தன்மையைத்தான் காட்டும். நாட்டின் ஆளும் பீடத்தில் இதுவரையில் அமர்ந்திருந் தோர், இந்தத்துறையில் ஊக்கங் காட்டவில்லை. இனியே னும் ஊக்கங் காட்டும்படி ஆளந்தார்களைத் தூண்டவேண்டிய பொறுப்பு, தென்னாட்டறிஞர்களின் நீங்காக் கடமையாகும். கோவை மாநாட்டில், அறிவியல் வளர்ச்சியின் அதிசயத்தை வற்புறுத்திப் பேசிய சர்.சி. வி.இராமன், தென்னாட்டவர், மத்திய இந்திய அரசாங் கம் இதைச்செய்யும் என்று எதிர்பார்ப்பது தவறு என் றும், சென்னை அரசாங்கமே ஆராய்ச்சிக்கூடங்களை நிறுவப் பாடுபடவேண்டும் என்றும் கூறியுள்ளார். தென்னாடு பிறர் தயவை எதிர்பார்த்து நிற்கும் இழிநிலையை மாற்றிக் கொண்டு, தன்காலிலேயே நிற்கும் உறுதியான நிலையைப் பெற்றால்தான், வருங்காலத்தில் வாழமுடியும். வருங்கால உலகை உருவாக்கும் அறிவியல் அறிவு,நாட்டுச்சீரமைப் பு வீரர்களுக்கு ஏற்படும் நிலையை உண்டாக்க, அரசாங்க மும், அறிஞர்களும் பணிபுரிய முன்வர வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பாதை_1948.pdf/31&oldid=1732799" இலிருந்து மீள்விக்கப்பட்டது