உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய பாதை 1948.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 4. வரலாறு "தென் திசையைப் பார்க்கின்றேன் என்செய்வேன் என்றன் சிந்தையெலாம் தோள்க ளெலாம் பூரிக்கு தடடா!" ஆம்! தென்றிசைத் திராவிடத்தைப் பார்த்துத்தான்! 'எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெருந்தமிழ் அண் ங்கு நடமாடும் திராவிடம் - முச்சங்க இருப்பும், மூவேந் தராட்சியுங் கொண்டிலங்கிய திராவிடம் யவனரும் - சீனரும் உலாவிய நகரங்களையும், சோம்நாட்டுப் பொன், அரேபியநாட்டுக் குதிரை, ஈழத்தின் உணவு, பர்மியப் பொருள் ஆகியவற்றைச் சுமந்துவரும் மரக்கலங்கள் பல வும் முத்தமிட்டு நிற்கும் துறைமுகங்களையும் கொண்டி ருந்த திராவிடம்-வீரஉரைபுகன்று, போர்க்கோலம் பூண்டு புலியெனப் பாய்ந்து, களம்பல வென்ற மறவர்கள் வாழ்ந் த திராவிடம் - தென்புறம் கடலும் வடபுறம் குன்றும் கொண்டு, இயற்கை யன்னையின் எழிற் பீடமாக விளங் கும் திராவிடம் -இதுகாறும் மக்களால் மறக்கப்பட்டு வரலாற்றாசிரியர்களால் மறைக்கப்பட்டு வந்திருக்கிறது து! இம்மறைப்பு நீக்கப்படும்போது, சிந்தையும் தோளும் பூரிப்படைவது இயற்கைதானே! 'திராவிடம்' விளங்கும் துணைக்கண்டமான இந்தி யாவின் வரலாற்றை எழுத முன்வந்த வரலாற்றாசிரிய ரெல்லாம், இதுவரை திராவிடத்தைப் புறக்கணித்தே வந்திருக்கின்றனர். 'இந்திய வரலாறு எழுதிய மேலை ய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பாதை_1948.pdf/32&oldid=1732800" இலிருந்து மீள்விக்கப்பட்டது