உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய பாதை 1948.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 புதிய பாதை நாட்டாசிரியர்கள், திராவிடத்தின் வரலாற்றை வேண்டு மென்றே புறக்கணிக்கவில்லை; புறக்கணிக்க நேர்ந்தது. அதன் முழுக்குற்றமும், அவர்களைச் சார்ந்த கல்ல; ஏனெ னில், திராவிடம் அவர்கள் முன் நிறுத்தப்படவில்லை! இத் துணைக்கண்டத்தைச் சேர்ந்த வரலாற்றாசிரியர்கள் வேண்டு மென்றே திராவிடத்தின் வரலாற்றை மறைத் தார்கள். செய்யக்கூடாத செயல்தான்; ஆனால், இந்தநாட் டில் செய்தார்கள்! இந்தியத் துணைக்கண்டத்தில் வரலாற் றாசிரியரா கத் தோன்றுவதற்குரிய வாய்ப்புடைய நிலையில் இருந்த வர்கள், வட மொழியாகிய சமஸ்கிருதத்தையும், அதன் கண் எழுந்த நூல்களையும், வடநாட்டையும், அங்கு வாழ் ந்த மக்களின் வரலாற்றையுமே எழுதி முடித்தார்கள். இந்திய வரலாற்றை ஆராயும்பொருட்டு இங்குவந்த மேலைநாட்டாசிரியர்களிடம், வடமொழி நூல்களும் வட நாட்டுச்செய்திகளும் முன்வைக்கப் பட்டன வேயன்றித், தென்னாடும் அதன் வரலாறும் அவர்களிடம் சுட்டிக் காட் டப்படவில்லை. வடமொழி நூல்களை ஆராய்ந்து, அதன் வயப்பட்டு, அதிற் கூறப்பட்ட செய்திகளை மட்டுமே மேலை நாட்டார்க்கு எடுத்துக் கூறுவதை நீண்டகாலப் பழக்கமாகக் கொண்டிருந்த மாக்ஸ் முல்லர், தம்கடைசிக் காலத்தில், "என் வாழ்நாளின் பெரும் பகுகியை, வட மொழி நூல்களை ஆராய்வதிலேயே செலவழித்து விட் டேன். இதைவிடப் பண்பட்ட பழமையான தென்னாட்டு நாகரிகத்தைத் துருவிப்பார்க்க மறந்தேன்" என்று வருந் திக்கூறியதாகச் சொல்லப்படுகிறது. இம்மாதிரியாக வே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பாதை_1948.pdf/33&oldid=1732801" இலிருந்து மீள்விக்கப்பட்டது