உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய பாதை 1948.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாறு 33 மேலைநாட்டு வரலாற் றாசிரியர்களிற் பலர், தென்னாட் டைத் திரும்9ப் பார்க்க மறந்தனர்! தவறினர்! மை இந்திய வரலாற்றைத் துருவிப்பார்க்கத்தொடங்கிய மேனாட்டாருள், சர் ஜான் மார்ஷல், சிலேட்டர், ஹீராஸ் பாதிரியார் போன்றவர்கள், தென்னாட்டவராகிய திராவி டரின் பண்பட்ட பழமையான நாகரிகத்தின் மேன்ை யையும் வரலாற்றின் சிறப்பையும் அறிந்து, உலகுக்கு எடுத்துரைக்கத்தலைப்பட்டனர். திராவிடத்தில் வாழ்ந்த திராவிடரே. உலகில் முதன்முதலாக நாகரிகம் பெற்று உயர்ந்த நிலைபிலிருந்தோராவர்' என்று, சிலேட்டர் கூறி யுள்ளார். சிந்துநதிவெளியில் மறைந்து கிடந்த ஹாரப்பா, மகோஞ்சதாரோ ஆகிய இடங்களை அகழ்ந்து காணும் ஆராய்ச்சியிலீடுபட்ட சர். ஜான் மார்ஷலும், ஹீராஸ் பாதிரியாரும், அங்குப், பாழடைந்து பூமிக்கடியில் படிந்து கிடக்கும் நகரங்களில் தோன்றி வளர்ந்துமறைந்த நாகரிகம் திராவிட நாகரிகம் எ ன்றும், அக்காலை இவ் விந்தியத் துணைக்கண்ட முழுதும் அந்நாகரிகச் சிறப்புடை யமக்களே வாழ்ந்து வந்தனர் என்றும் கூறியுள்ளார்கள். இவ்வாறாக, இயற்கையாலும் பகைவர்களாலும் மறைக் கப்பட்ட-மறங்கடிக்கப் பட்ட திராவிடத்தின் வரலாறு, தோண்டி எடுக்கப்படுகிறது இந்நாளில். தோண்டும் வே லை முற்றுப் பெறவில்லை, ஆரம்பக் கட்டத்தில்கான் இரு அந்துவருகிறது.இருள்படிந்த திராவிட வரலாற்றின் அடி வானத்தில், இப்பொழுதுதான் ஒளிவீசத்தொடங்கியிருக் கிறது! இந்தச் சிறிதளவு ஒளியில் கென்படும் திராவிடத் தைக் காணும் போதே, 'சிந்தையெலாம் தோள்களே லாம் பூரிக்குதடடா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பாதை_1948.pdf/34&oldid=1732802" இலிருந்து மீள்விக்கப்பட்டது