வாலாறு 35 படைகடந்த நெடுஞ்செழியன் ஆரியப்படைகளை முறி யடித்து வென்று நின்ற திறம், பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்றவனின் வீரநிகழ்ச்சி ஆகியவை கள், திராவிடமக்களுக்கு இன்னும் அறிமுகப் படுத்தப் படவில்லை! வாடாவஞ்சியின் சிறப்பும், பீடார் உறந்தையின் பொலிவும், மாடமதுரையின் மாண்பும், பூம்புகார், நீர்ப் பெயிற்றுத்துறை, தொண்டி, செந்தில், குமரி, முசிறி போன்ற துறைமுகங்களில் நடந்தேறிய பண்டமாற்றுப் பெருக்கமும். இன்னபிறவும் உணர்த்தப்படவில்லை! சேரன் பெருங்கடலான அரபிக்கடலைச், சேரன் எப்படிக் கடற்படைத்தளமாகக் கொண்டு விளங்கினான் என்பதும், யவனம், சீனம், காழகம், சாவகம், அரேபியா போன்ற நாடுகளிலிருந்துவணிகக் கப்பல்கள் பொன்னும் மணியும் பிறவும் ஏற்றிக்கொண்டுவந்து திராவிடத்தின் துறைமுகப்பட்டினங்களில் கொட்டிவிட்டு, மிளகுப்பொதி களையும், அரிசிமூட்டைகளையும், நறுமணச் சாந்துகளையும் அகிலையும், தேக்கையும் ஏற்றிக்கொண்டு போகும் பாங் கும், இந்தநாட்டு வரலாற்று ஏடுகளில் இடம்பெற வில்லை! பொதுவாகப் பண்டைத் திராவிடமக்கள் கொண்டிருந்த பண்புகள், வாழ்க்கை முறை, அரசியல் கோட்பாடு, பொருளாதார நிலைமை ஆகியவற்றை விளக் கிக் காட்டும் அளவில், தொல்காப்பியம், அகநானூறு, புறநானூறு, பத்துப்பாட்டு, பதிற்றுப்பத்து, கலித் தொகை, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்
பக்கம்:புதிய பாதை 1948.pdf/36
Appearance