உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய பாதை 1948.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 புதிய பாதை ய கள் விளக்கிக் காட்டியிருந்தும், இதுகாறும் தோன் றிய வரலாற்றாசிரியர்கள் இவற்றை யெல்லாம் புறக் கணித்து, வடமொழி நூல்களையே ஆதாரமாகக் கொண் டனர். மதுரையின் அருகிலும், திருநெல்வேலியின். செய்யப்பட்ட புதை பக்கத்திலும் அண்மையில் பொருள் ஆராய்ச்சிபின் பலனாக, ரோம்நாட்டு நாணயங் கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை, யவனரின் நட மாட்டம் திராவிடத்தில் இருந்த வரலாற்றைத் தெளி வாக்குகின்றன. வாழ்ந்து-கடலால் அழிந்து - இன்று மணற்பரப்பாகக் காட்சியளிக்கும் காவிரிப்பூம் பட்டினம், பண்டை உருமறைந்து வேற்றுருவில் நின்று நிலவும் உறையூர், சேரன் வாழ்ந்த வஞ்சிக்கோடு, பாண்டியன் ஆண்ட மதுரை, சோழன் ஆண்ட தஞ்சை, பல்லவர் ஆண்ட காஞ்சி போன்ற நகரங்களில் வரலாற்றுச் சிறப்பு டைய பகுதிகளை அகழ்ந்து கண்டால், பழையசின்னங் கள் அகப்படக் கூடும். அந்தவேலையைச் செய்ய அரசாங் கம் முன்வரவில்லை. முன்வருமா என்பதும் ஐயப்பாடே! திராவிடத்தின் வரலாற்றைச் செப்பனிடுவதிலே, இன்ன மும் அக்கரை பிறக்கவில்லை; பிறந்தால், நாட்டின்மீது நல்லொளிவிழும் என்பது திண்ணம்! திராவிடம் வந்துசென்ற ஐரோப்பிய அறிஞர்களே யன்றி, 9 அதற்கு முன்பும், கிரீஸ், அரேபியா, பாரசீகம், சீனம் ஆகிய நாடுகளிலிருந்து திரா விடத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டுச் சென்ற அறிஞர் சிலர்,குறிப்புகள் எழுதிவைத்திருக்கிறார்கள். அவர்களெல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பாதை_1948.pdf/37&oldid=1732805" இலிருந்து மீள்விக்கப்பட்டது