உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய பாதை 1948.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாறு 37 லாம் திராவிடத்தைக் கண்டவிதம் எவ்வாறு என்பதை, இளம் மாணவர்களின் உள்ளத்தில் நாட்டுப்பற்றுக்கிளர்ந் தெழும் எண்ணம் இன்னமும் முன்வைக்கப்பட வில்லை. " ம "திராவிடக்கலை" என்று சிறப்பித்துச் சொல்லக்கூடிய சிற்பக்கலைச் சின்னங்களும், ஓவியக்கலைச் சின்னங்களும் தெளிவறிவால் உணரப்படாமல், அலட்சியம் என்னும் மூடுபனியால் மூடப்பட்டுக்கிடக்கின்றன.கிரீக்கிய நாட்டின் சிற்பக்கலைச் சின்னங்களாக விளங்கும் பளிங்குச்சிலைகள், இன்று உலகோர் போற்றும் தன்மையில் கண்காட்சிச் சாலைகளில் வைக்கப்பட்டிருக்கின்றன. அந்தச்சிலைகளிற் பல கடவுளரின் உருவங்களெனக் கருதப்பட்டன வென் றாலும், இன்று அவற்றின் கலைச்சிறப்பை உணரும் அளவுக் கே போற்றப்படுகின்றனவே யல்லாமல், "கேட்டவரம ளிக்கும் கீர்த்தி வாய்ந்த தெய்வங்களாகக் கருதப்பட வில்லை. திராவிடத்தின் பலபாகங்களிலும் சிற்பக்கலைச் சின்னங்களாக விளங்குபவை, பெரும்பாலும் கடவுள் என்று கருதப்படும் கற்பனைப் பொருள்களின் உருவங் களே. கிரீக்கிய நாட்டுப்பளிங்கு வேலையைக்காட்டிலும், சற்றுக்கடினமான நுண்மாண்வேலைப்பாடுடையது கருங் கல் வேலை கருங்கற்களில் செதுக்கி எடுக்கப்பட்ட உருவங் கள், திர விடக்கலையின் சின்னங்களாக நாட்டின் பாகங்களிலும் இலங்குகின்றன. அவைகளெல்லாம், கண் காட்சிகளுக்கு அகற்றப்பட வேண்டும். அல்லது அவை இருக்கும் கோயில்கள், கண்காட்சிச்சாலைகளாக மாற்றப் படவேண்டும். மக்கள் ஒழுக்க அறிவுக்கு மாறுபட்டு ஆபாசமாக விளங்குவனவற்றை நீக்கி, ஏனையவற்றைக் பல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பாதை_1948.pdf/38&oldid=1732806" இலிருந்து மீள்விக்கப்பட்டது