உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய பாதை 1948.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 புதிய பாதை கண்டுகளிக்க மக்கள் முன்னால் நிறுத்தப்படின், கிராவிடக் கலையுணர்வு தெளியப்படும். தமிழகக் கோயில்களின் கோபுர அமைப்பு, தூண்க ளின் உச்சியில் மண்டபத்தைத் தாங்கிநிற்கும் கொடுங் கைகள், சிங்கத்தின்வாயில் வெளியெடுக்க முடியாதவாறு உள்குடைந்து செதுக்கி அமைக்கப் பட்டிருக்கும் உருண் டையான கருங்கற் பந்து, கருங்கற்சங்கிலி, தஞ்சையிலி ருப்பது போன்ற காளைமாடு, விட்டங்கள், விமானங்கள் இன்னபிற திராவிடக் கலைச்சிறப்பு'(Dravidian archi- tecture) என்று புகழ்ந்து கூறத்தக்கனவாகும். அவற் றை யெல்லாம், வழிபாட்டிற் குரிய மதிபிழந்து மண்டி யிட்டு வணங்குவதற்குரிய பொருள்களாக்காமல், கண்டு களித்தற்குரிய கண்காட்சிப் பொருள்களாக மாற்ற வேண்டும். அப்பொழுதுதான், அவை ஒவ்வொன்றும் வரலாறு கூறிநிற்கும்! திராவிடம் இன்று இருண்டஉலகில் நிற்கிறது! அதனை ஒளியுலகிற்கு இழுத்துவர, அறிஞர்கள், வரலாற்று உண்மைகள் என்னும் ஒளிக்கதிர்களை அதன்மீது விழும் படிசெய்ய முயலவேண்டும். அப்பொழுதே, மறைந்த திராவிடம் மக்கள் முன் வரும் என்பது உறுதி! சிலநாட்களுக்கு முன், மதுரையில் நடைபெற்ற தமிழ் விழாவுக்குத் தலைமை தாங்கிய அறிஞர் ஆர். கே. சண்முகம் அவர்கள், திராவிடத்தின் வரலாறு திருத்தி அமைக்கப்படவேண்டும் என்னும் கருத்துப்படப்பேசியு ள்ளார். அவர் கூறியதாவது:-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பாதை_1948.pdf/39&oldid=1732807" இலிருந்து மீள்விக்கப்பட்டது