உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய பாதை 1948.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை 365 நான் அவ்வப்போது எழுதிய சில கட்டுரைகளை ஞாயிறு நூற் பதிப்பகத்தார், அன்பை ஆதாரமாகக் கொண்டு தொகுத்து வெளியிட்டுள்ளனர். அவை, தொகுத்து வெளியிடக்கூடியனவாக இருக் கட்டும் என்று கருதி எழுதப்பட்டன அல்ல. எழுதிப் பழகும் பயிற்சிக்காக எழுதப்பட்டனவே யாகும். இந்தத் தொகுப்பிற்குப் 'புதியபாதை' என்று பெயரிட்டிருக்கிறார்கள். 'புதியபாதை' ஏதும் அறியா தார்க்குச் சிறு வழிகாட்டியாகவும், அறிந்தார்க்குத் தூண்டு கோலாகவும் விளங்கட்டும் என்று கருதி, ஞாயிறு நூற் பதிப்பகத்தாரின் முயற்சிக்கு மகிழ்ந் தேன். என்னை இந்தத் துறையில் ஊக்குவித்த பதிப் பகத்தார்க்கு, என் உளமார்ந்த நன்றி உரித்தாகுக! 1-3-48 சென்சு } இரா. நெடுஞ்செழியன், -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பாதை_1948.pdf/4&oldid=1732749" இலிருந்து மீள்விக்கப்பட்டது