உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய பாதை 1948.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாறு 39 தமிழகத்தைப்போல் மொழிக்கும் பண்பாட் டிற்கும் சிறப்புக்கொடுத்த நாடு, உலகில் வேறு எங்கும் இல்லை. தமிழ்ப்பண்பாடு சீரழிந்ததற்கு ஒரு காரணம், இந்திய வரலாறு எழுதிய மேலைநாட்டு வரலாற்றாசிரியர்கள், வரலாற்றுச் செய்திகளைச் ய தங்களுக்கு வேண்டிய சமஸ்கிருத நூல்களி லிருந்து எடுத்துக் கொண்டதேயாகும். இது, திரா விட அல்லது தமிழ் நாகரிகத்திற்குப் பிற்பட்டதான ஆரிய நாகரிகத்திற்கு, அதிகச் சிறப்புக் கொடுக்கும் படி கொண்டுபோய்விட்டது. ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் கண்டுபிடித்த கண்டு பிடிப்புகளி லிருந்து, திராவிட அல்லது தமிழ் நாகரிகம், ஆரியத்தை விடத் தொன்மை வாய்ந்ததாகும் என் பது 'பெறப்படுகின்றது" என்பதாகும். சர். ஜான்மார்ஷல், "இந்திய வரலாற்றின் தொடக்கம், வைகையாற்றிலிருந்து ஆரம்பிக்கப்படவேண்டும்" என்று, வலியுறுத்திக் கூறியுள்ளார். ஆகவே, இந்தியத் துணைக் கண்ட வரலாறு தொடங்கப்படவேண்டிய இடம். வட நாடல்ல; வைகையாறு! கங்கைக் கரையல்ல; காவிரிக்கரை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பாதை_1948.pdf/40&oldid=1732808" இலிருந்து மீள்விக்கப்பட்டது