40
5, சமுதாயம்
சமுதாயம்! மக்கள் கூடி வாழும் தன்மையைக் குறிக்குமொரு சொல், சமுதாய அமைப்பு, நாகரிக வளர்ச்சியின் அறிகுறி!
கல்லும் முள்ளும் நிறைந்த இருள் சூழ்ந்த காடுகளில், விலங்குகளோடு விலங்காய்த் திரிந்து வந்த மக்கள், தங்களை அழிக்கும் இயற்கைச் சக்திகளை எதிர்த்து வாழ வேண்டி, கூட்டுப் படை அமைக்கும் வேலையில் முனைந்தனர், தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஏற்படுத்திக் கொண்ட கூட்டமைப்பு, நாளடைவில் சமுதாயமாயிற்று,
சமுதாய ௮மைப்பு வளர வளர, அதற்குரிய கட்டுப்பாடுகளும், நெறிமுறைகளும், திட்டங்களும் அவ்வப்போது ஒவ்வொரு நாட்டிலும் வகுக்கப்பட்டன. ஒரு காலத்தில் ஏற்பட்ட அமைப்புப் பயன்படாத பொழுதும், பாதகம் விளைக்கும் போதும் தொடர்ந்து வந்த காலத்தவர், சமுதாயத்தைத் திருத்தி ௮மைக்கத் தலைப்பட்டனர். சமுதாய .௮மைப்பு, இன்னும் முற்றும் முடிந்ததொரு நிலையை உலகில் அடையவில்லை ; ௮டையுமாவென்பதும் ஐயப்பாடே! சமுதாயச் சீர்திருத்த வேலைகள், எல்லா நாடுகளிலும் இன்னும் நடைபெற்றுக் கொண்டுதானிருக்கின்றன.
மக்களுள் ஒருவர் மற்றொருவரைப் போல் காணப்படுவதில்லை. ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதத்தில் குறைபாடுடையவராகவே காணப்படுகின்றனர். அந்தக் குறைபாடுகளுக்கு, அவர்களே முழுக் காரணமாக மாட்டார்கள்... ..