உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய பாதை 1948.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமுதாயம் 41 அத்தகைய குறைபாடுகள் இருப்பதற்குரிய காரணத்தை, இயற்கையும் விளக்கிக்காட்டியதில்லை. எல்லோரும் ஒன்று சேர்ந்து சமுதாயமாகும்போது, மக்களிடத்தில் தனித் தனியே காணப்படும் குறைகளால், மக்களின் பொது இன்ப வாழ்வு சீர் குலைக்கப்படாமல் பாதுகாக்கக், கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அப்படி ஏற் படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளைத் தங்கள் சொந்த நன்மையை எண்ணியும், மற்றவரின் உரிமைகளைப் பறிக்கவேண்டியும் ஆணவக்காரர்கள் பயன் படுத்த முன்வரும்போது, அவர் களையும், அவர்கள் ஆதிக்கத்தையும் ஒழிக்கச் சமுகாயப் போராட்டங்களும், புரட்சிகளும் நடைபெறுகின்றன. க மனிதன், தனக்கு முன்பிருந்தோரின் வாழ்க்கை முறையை முன் மாதிரியாக நிறுத்திக்கொண்டு, அதை அப் படியே வைத்துக்கொண்டோ, அல்லது அதில் சிறிது திருத் தஞ் செய்துகொண்டோ, அல்லது அதை மாற்றியமைத்துக் கொண்டோ வாழ்ந்துவிட்டுப் பின்மடிகிறான். அவனுடைய வாழ்க்கை முறை, வருங்காலச் சந்ததிக்கு முன்மாதிரியாக அமைகிறது. ஆகவே, இறந்த காலங்களுக்குக் குழந்தை விளங்கிய மனிதன், வருங்காலத்திற்குத் தந்தை யாக க யாகிறான். கஎ ஒவ்வோர் உயிருக்கும் இயற்கையாக ஏற்படும் விழைவு, இரண்டு. ஒன்று பசியாறி இன்பந் துய்த்தல்; மற்றொன்று தன் துணையோடு சேர்ந்து இன்பந்துய்த்த.. காட்டு மிராண்டி நிலைக்கு முன்பு மனிதன் கொண்டிருந்த வாழ்க் கைக் குறிக்கோள்கள், உணவு தேடுதல், இனஞ்சேர்தல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பாதை_1948.pdf/42&oldid=1732818" இலிருந்து மீள்விக்கப்பட்டது