உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய பாதை 1948.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமுதாயம் 43 பிடிக்கத் தொடங்கினார்கள். ஒரு கூட்டத்தார் மட்டுமல்ல, பலரும்; ஒரு நாட்டில் மட்டுமல்ல, பலநாடுகளிலும் ; ஒரு காலத்தில் மட்டுமல்ல, பல காலங்களிலும். இவ்வகையில் தொடர்ந்த பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளில், மனிதனின் அறிவு சிறிது சிறிதாக - ஆனால் பல கஷ்ட நஷ்டங்களுக் கிடையே, வளர்ந்து வரலாயிற்று. பொரு காணவியலாத-கேட்கமுடியாத - உணராப் ளாகிய கடவுள், சமுதாயத்தில் முக்கிய தொரு நடுவிடத்தில் நிறுத்தப்பட்டுவிட்டதால், சமுதாயத்தில் காணப்படும் அவ் வளவுக்கும், அதனிடத்திலே சமாதானம் காட்டும் முறை யில் தான், இதுவரையிலும் நிலைமை இருந்து வந்திருக் கிறது. அந்த நம்பிக்கை நிலையிலிருந்து, உண்மை அறிவு நிலைக்கு மக்களை இழுத்துச்சென்று கொண்டிருப்பது அறிவியலாகும்! அறிவியல், ஏன்? எப்படி? எதற்கு? என்ற வினாக்களுக்கு விடை கொடுத்துக்கொண்டு, மெள்ள சமூதாயத்தை உருட்டிச் செல்லுகிறது. உருட்டிச் செல்லும் போது, மதம் முட்டுக்கட்டை போடு கிறது என்றாலும், முட்டுக்கட்டையைத் தாண்டித் தாண்டிக் குதித்துக்கொண்டே அறிவியல் நகர்கிறது ! ற மெள்ளச் கையில் ச் சமுதாயம் வளர, சீரடைய, நன்மைபெற, அறியாமை யிருள் நீங்கப்பெற்று அறிவொளி பெறவேண்டும். வாழ்க் ஏற்படும் துன்பங்களுக்கும் துயர்களுக்கும், கஷ்டங்களுக்கும் நஷ்டங்களுக்குமுள்ள காரணங்களை, இதுவரையிலும் மக்கள் விடாப்பிடியாகப் பற்றிக்கொண்டி ருக்கும் மதம் விளக்கிக்காட்டவில்லை. அதை அறிவியல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பாதை_1948.pdf/44&oldid=1732819" இலிருந்து மீள்விக்கப்பட்டது