உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய பாதை 1948.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமுதாயம் 47 கணக்கான ஆண்டுகளாகக் கடவுளைக் காட்டிச் சமுதாயத் தின் உடலையும், உள்ளத்தையும் முறையே அடிமை கொண்டு, மக்களின் இரத்தத்தை உறிஞ்சி வந்திருக்கின்றன. அந்த இரண்டு கழுகுகளினாலும் ஏற்படுத்தப்பட்ட கட்டுத்திட்டங்கள் உடைக்கப்பட்டுப், பகுத்தறிவின் பாற்பட்ட-நீதி நேர்மையினால் உண்டாக்கப்பட்ட புதிய பாதையில் சமுதாயம் செலுத்தப்படவேண்டுமானால், சமுதாயப் புரட்சிகள் ஏற்பட்டே தீரவேண்டும். வாழ்வுக்குத் தீமை பயக்கும் - மக்களைப் பிரிவு படுத் தும் - பகுத்தறிவுக்கு முரண்பட்ட பழமைக் கருத்துக் கள் அனைத்தும், அழிக்கப்படவேண்டும். மனித அறிவுக் குட்பட்ட அனைத்தையும் வாழ்வுக்கேற்ற முறையில் பயன் படுத்தும் உணர்வு, சமுதாயத்தில் ஏற்படவேண்டும். மனித னுடைய தேவைகள் அனைத்தும் எல்லோர்க்கும் தேவை யான அளவுக்குக் கிடைக்கப்பெற்றுப், பிணக்குகளுக்கும் பிரிவுகளுக்கும் இடம் ஏற்படாவகையில், சமுதாயக் கட்டுத் திட்டங்களை மாற்றியமைக்க ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும். ஒவ்வொருவரும் தங்களாலான கடமைகளைச் செய்ய முன்வரின், சமுதாயம் புதிய பாதையில் உருண்டு விரைந்தோடும் என்பது திண்ணம். புதிய பாதையில், வைதீக வளைவுகள், சனாதனச் சருக்கல்கள், பழமையென் னும் படுகுழிகள், மூடப் பழக்க வழக்கமென்னும் முட் புதர் கள் இல்லாமற் செய்ய, இளைஞர்களின் சலியா உழைப்புத் தேவை. அறியாமை யிருள் நீங்கி அறிவொளி எங்கும் வீசப் பட்டால், அப்பொழுது இன்பபுரியை நோக்கி மக்கட் சமு தாயம் நகரும் /

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பாதை_1948.pdf/48&oldid=1732822" இலிருந்து மீள்விக்கப்பட்டது