48 6. பொருளாதாரம் 'பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும், பொரு ளல்ல தில்லை பொருள் என்பது வள்ளுவர் கூற்று. மனிதவாழ்வின் இன்றியமையாத - முக்கிய - தேவையான தாக, இன்றைய உலகியல் நிலையில் அமைக்கப்பட்டிருப்பது பொருள். உயிருக்குக் கொடுக்கப்படும் மதிப்பைவிடப் பொருளுக்கே அதிக மதிப்புக் கொடுக்கப்படுகிறது. 'பணம் என்றால் பிணமும் வாய்திறக்கும்', 'ஈட்டி எட்டின வரை யிலும் பாயும், பணம் பாதாளம் வரையிலும் செல்லும்', 'பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே', 'ஏழையைக் கண் டால் மோழையும் பாயும்' என்பன போன்ற பழமொழி கள், பணத்திற்கு அதாவது பொருளுக்கு, வாழ்வில் முக்கியதோர் இடம் ஏற்பட்டுவிட்டதை உணர்த்தி நிற் கின்றன. வ காட்டு மிராண்டி நிலையில், மனிதன், தன் தேவை களைத் தான் நினைத்தபடி நிறைவேற்றிக்கொள்ள முடிந்தது. அப்பொழுது பணம் நடமாடவில்லை. பணம் நடமாடவில்லை. காட்டுமிராண்டி குத் தேவைகள் மிகமிகக் குறைந்து காணப்பட்டதால், அதை நிறைவேற்றிக் கொள்ளவே தன் உடல் வலிவையும், அறிவுத்திறனையும் செலவழித்தான். தேவை நிறைவேற்றப் பட்டவுடன், அவனுக்கு வேலை இருப்பதில்லை. தேவைக்கு மேற்பட்ட பொருளைக் குவித்துக் காப்பாற்றி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நினைப்பு, அப்பொழுது அவ னுக்கு ஏற்படவில்லை. அறிவினைக் கொண்டோ, ஆற்றலைக் கொண்டோ, பிறர் பொருளைச் சுரண்டவேண்டும் என்ற ஆசை பிறக்காத காலம் அது.
பக்கம்:புதிய பாதை 1948.pdf/49
Appearance